
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
மினி உலகக் கோப்பை என வர்ணிக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று லாகூரில் நடந்த 4-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய பென் டக்கெட் (Ben Duckett) ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
68 ரன்கள் சேர்த்த ஜோ ரூட் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், பென் டக்கெட் அணியை தாங்கிப் பிடித்தார். 143 பந்துகளில் 165 ரன்கள் சேர்த்த பென் டக்கெட், சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில், அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதனால், 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை குவித்தது.
352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. இதன் மூலம், சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை இலக்காக அமைந்த போட்டியாக இது மாறியது. தொடக்கத்தில் கேப்டன் ஸ்மித், அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஆஸ்திரேலியா ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர்.
இருப்பினும் மேத்யூ ஷார்ட் 63 ரன்களும், லாபுஷேன் 47 ரன்களும், அலெக்ஸ் கேரி 69 ரன்களும் சேர்த்து கை கொடுத்தனர். இவர்களுடன், 86 பந்துகளில் 120 ரன்கள் குவித்து ஜோஷ் இங்லிஸ், ஆஸ்திரேலிய அணியின் வரலாற்று வெற்றியை பெற்றுத் தந்தார். இவர்களின் அதிரடி மூலம், ஆஸ்திரேலியா அணி 15 பந்துகள் மீதம் இருந்த நிலையில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தன் அதிரடியால் ஆஸ்திரேலியா அணியை சரிவிலிருந்து மீட்ட ஜோஷ் இங்லிஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments