Ticker

6/recent/ticker-posts

Ad Code



கைதட்டல்கள்!


வெற்றியைக் கொண்டாட 
ஒருங்கே ஒன்றிணைந்த
இரு உள்ளங்கைகளின் 
சமரச ஓசை!

முயற்சியால் 
முன்னேறியவனுக்கு 
கொடுக்கப்படும் 
அங்கீகாரம்! 

மூலையில் வீணே 
முடங்கிக்கிடப்பவனின் 
செவிகளில் செய்திசொல்லும் 
ரீங்காரம்!

படித்துப் பட்டம் பெற்றவனுக்கு  
கொடுக்கப்படும் 
பாராட்டு! 

படிக்காத பாமரனுக்கும் 
நம்பிக்கை தரும் 
தாலாட்டு! 

சாதித்தவரும் 
போதித்தவரும் 
ஒன்றாய் அகமகிழக் 
கொடுக்கப்படும் 
பெருவிருந்து!

உடைந்த உள்ளங்களின் 
ரணங்களைக் குணமாக்கும் 
அருமருந்து!

உறங்கும் உள்ளங்களை 
உற்சாகமாய்த் தட்டி எழுப்பும் 
உன்னத ஒலி! 

தட்டப்படும் உன் ஒவ்வொரு 
கைதட்டல்களும்.....,
விழுந்தவன் எழுந்து நிற்கவும்,
தளர்ந்தவன் துணிந்து வாழவும் 
ஊன்றுகோலாகட்டும்!
அநீதிகள் அராஜகங்களை
என்றும் எதிர்த்து நிற்கட்டும்!

கல்ஹின்னை 
ஹில்மி ஹலீம்தீன் 


 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments