வங்காளதேசம்-இந்தியா;110 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

வங்காளதேசம்-இந்தியா;110 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி


12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 107 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 2-வது போட்டியில் நியூசிலாந்திடம் 62 ரன்னில் தோற்றது. 3-வது ஆட்டத்தில் 155 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

அதைத் தொடர்ந்து இங்கிலாந்து (4 விக்கெட்), ஆஸ்திரேலியா (6 விக்கெட்) அணிகளிடம் தோற்றது. இதனால் எஞ்சிய 2 ஆட்டங் களில் வெற்றி பெற்றால் தான் அரை இறுதிக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடி ஏற்பட்டது.

இந்திய அணி 6-வது போட்டியில் வங்காள தேசத்தை இன்று எதிர் கொண்டது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது.

அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மேக்னாசிங்குக்கு பதிலாக பூனம் யாதவ் இடம் பெற்றார். டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

மந்தனாவும், ‌ஷபாலி வர்மாவும் தொடக்க வீராங் கனைகளாக களம் இறங்கி னார்கள். இந்தியாவின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. 10-வது ஓவரில் 50 ரன்னை தொட்டது.

15-வது ஓவரில் இந்திய அணியின் தொடக்க ஜோடி பிரிந்தது. ஷிபாலி வர்மா 42 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவர் 42 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 74ஆக இருந்தது.

அதை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையான மந்தனா 30 ரன்னில் ‘அவுட்’ ஆனார். அடுத்து வந்த கேப்டன் மிதாலிராஜ் முதல் பந்திலேயே பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 74 ரன்னில் இந்திய அணி 3 விக்கெட்டைஇழந்து திணறிய நிலையில் இருந்தது.

4-வது விக்கெட்டான யாஷிகா பாட்டியா-ஹர்மன் பிரீத் கவூர் ஜோடி சிறிது நேரம் தாக்கு பிடித்து ஆடி யது. 24.4 ஒவரில் இந்திய அணி 100 ரன்னை தொட்டது.

ஹர்மன் பிரீத் கவூர் 14 ரன்னில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 108 ஆக இருந்தது. அடுத்து ரிச்சா கோஷ் களம் வந்தார். இந்த ஜோடியும் பொறுப்புடன் ஆடியது.

யாஷிகா நிதானத்துடன் விளையாடி அரை சதம் அடித்தார். 79 பந்தில் 2 பவுண்டரியுடன் 50 ரன்னை தொட்டார். 12-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் அவருக்கு இது 3-வது அரை சதமாகும்.

நன்றாக ஆடி வந்த இந்த ஜோடியும் பிரிந்தது. ரிச்சா கோஷ் 26 ரன்னிலும், யாஷிகா 50 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 43.1 ஓவர்களில் 176 ரன்னில் 6 விக்கெட்டை இழந்தது.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்தது. பூஜா 30 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஷினே ரானா 27 ரன்னில் அவுட் ஆனார்.

வங்காளதேசம் தரப்பில் ரிது மோனி 3 விக்கெட்டும், நசிதா அக்தர் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

230 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் விளையாடியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்காளதேச அணி 98 ரன் எடுப்பதற்குள் 7 விக்கெட்டை இழந்தது. இறுதியில் அந்த அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 40.3 ஓவர்களில் 119 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 110 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.

இந்திய அணி தரப்பில் ரானா 4 விக்கெட்டும் பூஜா, கோசுவாமி தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர்.

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post