கோவை மாவட்ட உலகத்திருக்குறள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வெண்ணிலா கலை இலக்கிய மன்றத்தின் மகளிர் தினவிழா (13 மார்ச், 2022 நிகழ்வு!)

கோவை மாவட்ட உலகத்திருக்குறள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வெண்ணிலா கலை இலக்கிய மன்றத்தின் மகளிர் தினவிழா (13 மார்ச், 2022 நிகழ்வு!)


மானுட தெய்வங்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக தையலை உயர்வு செய் எனவும் பெண்மையை போற்றுவோம் எனவும் இரு நிகழ்வுகளாக வெண்ணிலாவின் மகளிர் தின விழா நிகழ்ச்சிகள் கடந்த 13.03.2022 ஞாயிற்றுக்கிழமையன்று நிகழ்வுற்றது.

சிறப்பு அழைப்பாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் கவியரங்க கவிக்குயிலகள் மன்ற உறுப்பினர்கள் என அரங்கம் நிறைந்த அவையில் ஆகச்சிறந்த கவிஞர்கள் அபூர்வக்கலைத் திறனாளர்கள், புகழ் பெற்ற எழுத்தாளர்கள் அறிவுலக ஆசான்கள் கலந்துகொண்டு அகத்தை நிறைத்து தமிழ் முழக்கம் நிகழ்த்தி மன்றத்தின் மகளிர் தின விழாவை திருவிழாவாக்கி, சிறப்புச் செய்தார்கள்!

காலையில் அருள்மொழிச்செல்வர். அரங்ககோபால் அவர்களது தலைமையில் கோவை ஆறுமுகம்,இர.வேணுகோபாலகிருஷ்ணன், ஆ.பிரபாகரன், திருமதி.ஆர்த்தி, திருப்பூர்,ரமேஷ்,  மற்றும்
மா. வசந்த்குமார் ஆகியோர் பங்கேற்ற மனிதவாழ்க்கையில் அதிக மகிழ்ச்சிக்குக் காரணமாய் இருப்பது தாயா? தாரமா? தோழியா? எனும் சொற்சிலம்ப நிகழ்வு சிறப்புற நடைபெற்றது...

முனைவர் வேணு கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு திருவிக விருதுடன் பங்கேற்ற சான்றோர்களுக்குச் சான்றிதழ்களை உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் துணைத் தலைவர், குறள்யோகி முனைவர் மு.க. அன்வர் பாட்சா அவர்கள் வழங்கி சிறப்புரை யாற்றினார்.
பேசும் தெய்வம், முள்ளும் மலரும்,பூமிக்கு வந்த நிலவு,நீயின்றி அமையாது உலகு, இணையதள கவிக்குயில்கள்,மனைவி  அன்பின் வடிவமா?! அடிமையின் சின்னமா?!என்கின்ற தலைப்புகளில் முறையே முனைவர்.க.சோ.இராதா கிருஷ்ணன், கவிஞர் இன்பரசு, கவிஞர். க.அம்சப்ரியா  கவிஞர்.பொள்ளாச்சி முருகானந்தம்  மற்றும் திருக்குறள் தூதர். முனைவர்.மு.க.அன்வர் பாட்சா,  ஆகியோரும்   மங்கலம் மங்களம்,மச்சக் கண்ணீர் என்கின்ற தலைப்புகளில் தி.இராதாமணி மற்றும் கவிஞர்.விஜி கல்யாணி ஆகியோர் கலந்துகொண்ட உரையரங்கம்.
மதியத்திற்குமேல் கவிஞர் பிரியதர்ஷினி விமல்ராஜ் அவர்களின் தலைமையில் மகளிர் மட்டுமே பங்கேற்கும் புதுமை நிகழ்வாக
ஆதியும் அந்தமும் எனும் வடிவில் ஆதிவாக்கியமாக மலரின் மென்மை அந்தவாக்கியமாக மலரும் மேன்மை என்கின்ற கருப்பொருளில்  முள்கிரீடம் எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.

இளம்வயதிலேயே இயற்கையோடு ஒரு பயணம் எனும் நூல் எழுதி சாதனை படைத்த செல்வன்.தி.இரா.விஷாந்த் அவர்களுக்கு விழாவில் ஞானச் சூரியன் விருதும் சான்றிதழும் வழங்கிச் சிறப்பு செயயப்பட்டது.

முன்னதாக பரதநாட்டியம் நிகழ்த்திய செல்வி.இர.பிரியதர்ஷினிக்கு நளின நர்த்தகி விருதும் திருக்குறளை மனனமாக ஒப்புவித்த ஒன்றாம் வகுப்பு மாணவி இர.த்ரிஷா, திருக்குறளை இராகத்துடன் பாடிய செல்வி.தேவிகாசுரேஷ் இறைப்பண் பாடிய செல்வி.ஸ்ருதி செல்வராஜ் மற்றும் பாரதி பாடலைப் பாடிய திருமதி, ஸ்ரீ வித்யா சதீஷ்குமார் ஆகியோருக்கும் மன்றத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.

சொற்சிலம்பத்தில் கலந்துகொண்டு சொல்முழக்கமிட்டவர்களில் சிறந்த சொல்லாற்றல் உரைக்காக தமிழ்த் தென்றல் விருது இர.வேணுகோபால கிருஷ்ணன் அவர்களுக்கும்,
கவியரங்கில்   கவிமுழக்கமிட்ட  கவிதாயினிகளில் தமிழ்நிலா விருது.திருமதி.புவனா பிரகாஷ் அவர்களுக்கும், தமிழ்த்தாரகை விருது திருமதி.ஜெ.குணசுந்தரி அவர்களுக்கும் முத்தாய்ப்பாக தங்கத்தாமரை விருது செல்வி.புனிதா வெங்கடேஷ் அவர்களுக்கும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

இதில் இலக்கிய விழாக்களில் முதன்முறையாக போட்டிகளில் தேர்வுபெற்றவர்களாக நடுவர் அறிவித்த உடனேயே விழா மேடையிலேயே அவர்களது புகைப்படமும் பெயரும் பொறித்த விருதுக்கேடயமும் சான்றிதழும் இவ்விழாவில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

குனியமுத்தூர் பேராளுமைப்பெருந்தகையாளர்கள் பொன்னை பலராமகிருஷ்ணன் சகோதரர்கள் ஆதரவுடனும் உலகத்திருக்குறள் கூட்டமைப்பு,ஜோதி மைய அறக்கட்டளை கோவை, பட்டாம்பூச்சி குழுமம் ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்போடும் நடந்த இந்நிகழ்வை வெண்ணிலா மன்றத்தின் .கவியகம் மணிவண்ணன் ஆ.பிரபாகரன் மற்றும் கோவை ஆறுமுகம் ஆகியோர் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
தகவல்; 
வேட்டை நிருபர் 
தமிழ்நாடு 

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post