Ticker

6/recent/ticker-posts

Ad Code



கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-4


அயோத்தியா காண்டம்

தசரதன் எண்ணத்தைவெளிப்படுத்துதல்
ராமனை நாடாள வைக்க தசரதன்
பூமனத்தால் முன்மொழிந்தான் பார்

தசரதன் எண்ணத்தை ஒட்டி வசிட்டன்
அகத்தால் வழிமொழிந்தான் அங்கு.

இராமன்வருகை
ராமனும் தேரிலே மண்டபம் வந்தடைந்தான்!
பாமனத்தான் நின்றான் பணிந்து.

தசரதன்இராமனைக்கேட்டுக்கொள்தல்
எனது முதுமை நிலையால் மகனே
சுணங்காமல் நாடாள்வாய் நீ.

தந்தை தசரதன் ஆணைக்கு ராமனும்
அன்பால் உடன்பட்டான் அங்கு.

கோசலையின்மகிழ்ச்சியும்துன்பமும்
தாயாய் மகனரசன் என்றே மகிழ்ந்தாள்! 
நேயமுடன் பார்த்தாள் களித்து.
தாரமாய் நொந்தாள் கணவன் வனமேகும்
பாரத்தால் துன்பம் சுமந்து

கூனிவருகை!
நற்செய்தி கேட்டேதான் நாடே மகிழ்ந்திருக்க
அற்பமனக் கூனிவந்தாள் சோர்ந்து.

கைகேயி அங்கே துயின்றிருந்தாள்! பாதத்தைக்
கூனிதான் தீண்டினாள் அங்கு.

இன்னுமா தூக்கம்? நெருங்கித்தான் கோபித்தாள்!
வன்மம் களித்தது காண்.

ராமன் அரசனாம்! கேட்டாயா செய்தியை?
தூக்கம் கலைந்தெழு நீ.

என்மகன் நாட்டரசன்! கைகேயி மகிழ்ந்தெழுந்தாள்!
அன்பைப் பொழிந்திருந்தாள் தாய்.

உன்மகனா ராமன்? எவர்சொன்னார்? கோசலைதான்
என்றும் அவனுக்குத் தாய்.

கூனியின் நஞ்சுதோய்த்த சொற்கள் இறங்கியதும்
கூனி தொடங்கினாள் சூது! 

நாடாள விட்டால் உனக்குரிமை இல்லை!
அரசு மரியாதை யார்க்கு?

பரதன்தான் மூத்தவன்! நாட்டரச னாக்கு!
தரணிக்கே தாயாக மாறு.

மந்தரையின் போதனை வென்றது!  நீதிமங்கை
மந்தமானாள்! நொந்தாள் தவித்து.

யாரங்கே! மன்னன் தசரதனை நானழைத்தேன்!
கூறுங்கள் என்றாள் வெகுண்டு
.
(தொடரும்)



Post a Comment

0 Comments