ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் பியர் ஸக்ர்ஸேவ்ஸ்கி (55) மற்றும் ஒலெக்ஸாண்ட்ரா குவ்ஷினோவா (24) ஆகியோர், பணியில் ஈடுபட்டிருந்தபோது, கீயவ் புறநகர்ப் பகுதியில் உள்ள ஹோரென்காவில் ரஷ்ய தாக்குதலின்போது அவர்களுடைய காரில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவரும் உயிரிழந்தனர்.
அவர்களுடன் உடன் பணிபுரியும் பெஞ்சமின் ஹால் (39) என்பவர், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஃபாக்ஸ் நியூஸ் தலைமை செயல் அதிகாரி சூசேன் ஸ்காட் இச்சம்பவம் “நெஞ்சை பிளப்பதாக” உள்ளது என தெரிவித்தார்.
ஒரு ஊடகவியலாளராக ஸக்ர்ஸேவ்ஸ்கியின் “ஆர்வமும் திறமையும் ஈடுசெய்ய முடியாதது” என அவர் தெரிவித்தார்.
“பியர் ஸக்ர்ஸேவ்ஸ்கி போர் புகைப்படக் கலைஞர். ஈராக் முதல் ஆப்கானிஸ்தான், சிரியா வரை அவர் எங்களுடன் இருந்த இந்த நீண்ட காலத்தில், ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அனைத்து சர்வதேச செய்திகளையும் வழங்கியுள்ளார்” என தெரிவித்தார்.
இத்தாக்குதலில் உயிரிழந்த ஒலெக்ஸாண்ட்ரா குவ்ஷினோவா குறித்து ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தின் தேசிய பாதுகாப்புப் பிரிவு நிருபர் ஜெனிஃபர்கிரிஃபின் கூறுகையில், “அவர் திறமையான ஊடகவியலாளர். எங்களின் இழப்பு குறித்து வார்த்தைகளில் விவரிக்க முடியாது” என தெரிவித்தார்.
Vettai Email-vettai007@yahoo.com

0 Comments