ராஜபக்ஷாக்களின் ஆட்சியில் இலங்கை மக்களின் பரிதாப நிலை

ராஜபக்ஷாக்களின் ஆட்சியில் இலங்கை மக்களின் பரிதாப நிலை

மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது இன்றைய இலங்கை.

தினமும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு,பொருட்கள் தட்டுப்பாடு .வருமானம் இன்மை போன்ற கடுமையான ஒரு சூழலை இன்று இலங்கை மக்கள் அனுபவிக்கின்றார்கள் 

இலங்கையில் தங்கம் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது மீண்டும் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 12.5 கிலோ கிராம் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 4,199 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,680 ரூபாவாகவும் மற்றும் 2 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 672 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  

ஏற்கனவே அன்றாட உணவுகளுக்கே வழியில்லாமல் வாழும் ஏழை மக்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இனி வாழ முடியுமா என்று சாதாரண மக்களும் நினைக்கக்கூடிய ஒரு இக்கன்ட்டான நிலையில் உள்ளது இலங்கை.

பணக்காரர்கள் நினைத்த நேரத்தில் பறந்து விடுவார்கள் .பறந்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள் .அநேகமானவர்கள் வெளிநாடுகளில் வீடுகள் வாங்கியுள்ளார்கள். மேலும் பல சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இனவாதத்தை மட்டுமே நம்பியிருந்த இலங்கை அரசியல்வாதிகள் நாட்டின் பொருளாதாரத்தை பற்றிய சிந்தனை துளியும் இன்றி ஆட்சி செய்கின்றார்கள் .

 இலங்கையில் இனி பணக்காரர்கள் மட்டும் தான் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.

இலங்கையில் இவ்வளவு பெரிய பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மீண்டும் மீண்டும் கலவரத்தை தூண்டும் செயலில் ஈடுபடுகின்றன இலங்கையின் அரசியல் ஆதரவு மீடியாக்கள் .

இது மக்களின் கவனத்தை திசை திருப்பும் அரசாங்கத்தின் தந்திரம் என்று நாட்டு மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

கடந்த தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு குரல் கொடுத்த அதே இன மக்கள் இன்று அரசாங்கத்திற்கு எதிராக போராடத் தொடங்கியுள்ளார்கள் .

அது மட்டும் இன்றி, இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

அன்றிலிருந்து இன்றுவரையிலும் ஏதோ ஒரு வகையில் மக்களை கொலை செய்கின்ற ஆட்சியாகத்தான்  ராஜ்பஷாக்களின் ஆட்சி இருந்துள்ளது.

மஹிந்த யுத்தத்தால் மக்களை கொன்று குவித்தார் .இனக் கலவரத்தை தூண்டி மக்களை கொன்றார்.இன்று  கோத்தபாயவுடன்  சேர்ந்து அனைத்து மக்களையும் கொலை செய்கின்றார்.

எரிபொருளுக்காக காத்திருந்தே உயிரை இழக்கும் சூழலில் திடீரென்று லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டமை பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்து பதவிக்கு வந்த ராஜபக்சாக்கள் முஸ்லிகளுக்கு எதிராக பல கலவரங்களை உருவாக்கினார்கள் .

சாதாரண இலங்கை மக்களின் உள்ளத்தில் இனவாதத்தை வளர்த்து முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடிய ராஜபக்ஷாக்கள் இன்று ,அதே இனவாதிகளால் அழியும் நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது.
MASTER

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post