எழுதித் தீரா
இன்பம் நீ
முயன்று தோற்று
மகிழும் மொழி நான்

நீ விளக்கேற்றுகிறாய்
எனக்குள் பிரகாசம்
என்னைப் போர்த்திய
இருளெல்லாம் இருளில்

சிந்தாமல் சிதறாமல்
உன்னன்பை ஏந்துகிறேன்
நிறைகுடமாய் என்னுள்
உன் காதல்

கவிதைக் கண்களுனக்கு 
காவிய நேசமெனக்கு 
நரகம் செல்வோமா 
காதலால் சொர்க்கமாக்க

சொல்லிலும் செயலிலும்
புன்னகைக்கும் அன்பு
நரகத்தை புதைக்கிறது
சொர்க்கத்தை விதைக்கிறது
 
Vettai Email-vettai007@yahoo.com