இலங்கையின் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் GSP + சலுகையை குறிவைக்கும் புதிய குற்றச் சாட்டுக்கள்

இலங்கையின் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் GSP + சலுகையை குறிவைக்கும் புதிய குற்றச் சாட்டுக்கள்


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 49வது அமர்வு,  பெப்ரவரி மாதம் 28ம் திகதி ஆரம்பமாகியது. இது ஏப்ரல் மாதம் முதலாம் தேதி வரை ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ளது.

இம்முறை நிகழ்ச்சி நிரலில் ரஷ்யா, உக்ரைன் தொடர்பான பிரச்சினை முதலாவதாகவும், இலங்கை தொடர்பான பிரச்சிகனைகளுக்கு இரண்டாமிடம் வழங்கப்பட்டிருப்பதும் முக்கிய அம்சமாகும்.

இதேவேளை, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தொடர்பான ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் இந்த முறை அமர்வில் இலங்கை சம்பந்தமாக 17 பக்க அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறான இவ்வாறான நிலையில், இதற்கு வலுவூட்டும் வகையிலான கருத்தொன்றை இலங்கைக்கான சமூக செயற்பாட்டாளர், சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் இலங்கை சம்பந்தமாக  சர்சைக்குறிய வகையில் சில குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளார்.  ஐரோப்பிய நாடாளுமன்ற  முன்னிலையில், அம்பிகா சற்குணநாதன் வெளியிட்ட கருத்து, தற்போது   சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இது சம்பந்தமாக குற்றச்சாட்டுக்களை இலங்கை மறுத்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றம் முன்னிலையில், 2022  ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி, இலங்கையின் மனித உரிமை,  தொழிலாளர் உரிமைகள்    குறித்து கருத்துக்கள் பரிமாற்றப்பட்ட சந்தர்ப்பத்தில், அம்பிகா சற்குணநாதன், இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பாக இது குறித்து பின் வரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

01.போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையின் போது, இலங்கை போலீஸாரினால் சந்தேகநபர்கள் முறையற்ற விதத்தில் கைது செய்யப்படுகின்றதாகவும் மற்றும் தடுத்து வைக்கப்படுகின்றமை , கொலை செய்யப்படுகின்றதாகவும் இவரது அறிக்கை குறிப்பிடுகின்றது.

02. அமைச்சுக்கள் இராணுவமயப்படுத்தப்படுகின்றது என்ற அவரது குற்றச்சாட்டு கருத்து தொடர்பானவை

03. 2020ம் ஆண்டு முதல் அரச அதிகாரிகள் பொதுமக்கள் தொடர்பான முறையற்ற விதத்தில் நடந்து கொள்வதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

04. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட " ஒரே நாடு ஒரே சட்டம்" தொடர்பான ஜனாதிபதி செயலணி தொடர்பானது."ஒரே நாடு ஒரே சட்டம்'' தொடர்பான ஜனாதிபதி செயலணி, இனங்களுக்கு இடையில் முறுகள் நிலமைகள் மற்றும் வன்முறைகளை ஏற்படுத்தும் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார்.

05. கிழக்கு மாகாண காணி பிரச்சினைகள் மற்றும் தொல் பொருள் முகாமைத்துவம் இது சம்பந்தமான தொடர்பான ஜனாதிபதி செயலணி தொடர்பானது.

06. சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பது சமூக நல்லினகத்தை மீளக் கட்டி எழுப்புவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதா என்பது பற்றியும்  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அவரது  கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சுட்டிக் காட்டப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக இவற்றை மீளமைக்கவும்  இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாப்பதை உறுதி செய்வதற்கும், அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்கும் நடவடிக்கையாக  GSP+ சலுகை தடையை பயன்படுத்த வேண்டும் என அம்பிகா சற்குணநாதன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் முன் நிலையில் யோசனையொன்றை இதன்போது முன்வைத்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அரசாங்கத்தின் அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் GSP+ நிவாரண உதவியை பயன்படுத்த வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை குறித்து, தாம் கவலை அடைவதாக இலங்கை  தெரிவிக்கின்றது.

மேலும் கோவிட் வைரஸ் தொற்றின் பாதிப்புக்கு மத்தியில், நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மக்கள் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில்  ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ நிவாரணத் திட்டம் இலங்கைக்கு இல்லாது போகுமானால், அதன் பாதிப்பு காரணமாகக எதிர்நோக்க வேண்டிய வறுமை மேலோங்கி, வருமானம்  வீழ்ச்சி அடையும் என  இலங்கை வெளிவிவகார அமைச்சு இதற்கான தமது பதிலில் குறிப்பிடுகின்றது.

இலங்கை அரசாங்கம்  இனவவாதம் மற்றும் இராணுவமயமாக்கல் முன்னெடுக்கப்படுவதாக சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனின் கருத்துக்கு பதில் வழங்கியுள்ள வெளிவிவகார அமைச்சு, சிறுபான்மை சமூகத்திற்கு பாகுபாடு காட்டியதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் போலியான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவ்வாறான கருத்தை முன்வைத்துள்ளதாக இலங்கை இது தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளது.

இலங்கை அனைத்து இன மக்களும் வாழும் நாடு எனவும், இந்த நாட்டிற்குள் மதம் மற்றும் இன வேறுபாடின்றி அரசியலமைப்பின் கீழ் அனைத்து பிரஜைகளுக்கும் சமமான உரிமைகளுடன் வாழ உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான பதிலில் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

மேலும் பல்லினமக்கள் வழும் சமூகத்திற்கு மத்தியில் இலங்கை தொடர்பில் போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவது தொடர்பில்,  அனைத்து இன மற்றும் மதங்களை கொண்ட நாடான இலங்கை, இவ்வாறான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் அமைச்சு குறிப்பிடுகின்றது.

இலங்கையானது கடும் மோசமான அந்நிய செலாவணி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்பத்தில் GSP  ரத்துச் செய்யப்படுமாயின் மக்களின் இயல்பு வாழ்கையில்  பாறிய கவலையான ஒரு நிலையினை ஏற்படுத்தும்.


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post