ரஷ்யா, எமது நாட்டை பாலைவனமாக்கி பல பொதுமக்களைக் கொல்லும் வரை நிறுத்தாது-மரியுபோல் மேயர்

ரஷ்யா, எமது நாட்டை பாலைவனமாக்கி பல பொதுமக்களைக் கொல்லும் வரை நிறுத்தாது-மரியுபோல் மேயர்

நேட்டோ விழித்தெழுந்து, இது ஒரு பிராந்திய மோதல் அல்ல. இது ஜனநாயகத்திற்கு எதிரான போர், சுதந்திரத்திற்கு எதிரான போர் என்பதை புரிந்து கொள்ளும் வரை, வானத்தில் இருந்து நமது குடிமக்களை புடின் கொல்வதைத் தடுக்க முடியாது’ என மரியுபோல் மேயர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்ய துருப்புக்கள் உக்கிர தாக்குதல்களை நடத்திவருவதால், உக்ரைனுக்குள் படைகளை அனுப்புமாறு நேட்டோ தலைவர்களை மரியுபோல் மேயர் செர்ஜி ஓர்லோவ் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யா, எமது நாட்டை பாலைவனமாக்கி பல பொதுமக்களைக் கொல்லும் வரை நிறுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலின் தொடக்கத்திலிருந்து ரஷ்யப் படைகள், 30க்கும் மேற்பட்ட குடிமக்களின் தளங்களை குண்டுவீசித் தாக்கியுள்ளன என்று அந்நாட்டின் உட்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

எனினும் ‘ரஷ்யர்கள் தாங்கள் பொதுமக்கள் மீதோ பொருட்களையோ தாக்கவில்லை என்று தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் உக்ரைனின் வடக்கு செர்னிஹிவ் பிராந்தியத்தில் ரஷ்ய விமானப் படையினர் நடத்தியத் தாக்குதல்களில் 47பேர் உயிரிழந்துள்ளாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது முந்தைய எண்ணிக்கையான 33இல் இருந்து உயிரிழப்பு எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. உக்ரைனின் உள்ளூர் அவசர சேவைகளின் படி, கடுமையான ஷெல் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள்  இடைநிறுத்தப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post