உலகைப் அச்சுறுத்தப்போகும் மற்றொரு தொற்றுநோய்! ( Monkeypox!)

உலகைப் அச்சுறுத்தப்போகும் மற்றொரு தொற்றுநோய்! ( Monkeypox!)


Monkeypox!

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், ஸ்வீடன் உள்ளிட்ட 12 நாடுகளில் 80 பேருக்கு "குரங்கு அம்மை" (Monkeypox) என்ற புதியவகை நோய் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாதுள்ள இந்நோய் ஆபத்தானதல்ல எனக்குறிப்பிடப்பட்டாலும் மக்கள் எச்சரிக்கையாக இருப்பது நலமெனக் கூறப்படுகின்றது.

இந்த அரியவகை நோய் 1958ல்  ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதாக அறியப்பட்டதால்,  இது  "குரங்கு அம்மை" என அழைக்கப்படுகிறது.
1970ம் ஆண்டு இது முதலில் மனிதர்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்நோய்  சின்னம்மையுடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகின்றது.

இந்நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்களைத் தொடுவதன் மூலமாகவும், அவற்றின் உடலிலுள்ள  திரவங்கள் மூலமாகவும் இந்நோய் பெரும்பாலும்  மனிதர்களுக்குப் பரவுகின்றது. அத்துடன் இது எலிகள் மற்றும் அணில் போன்ற விலங்குகளிடமிருந்தும் பரவுவதாகக் கூறப்படுகின்றது!


இருந்தபோதிலும்  "குரங்கு அம்மை" மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுவதில்லை எனவும்,  இந்நோயினால் பாதிக்கப்பட்டவர் உபயோகப்படுத்திய பொருட்கள் மற்றும்  ஆடைகள் என்பவற்றை  உபயோகிப்பதன் மூலம் மற்றவர்களுக்கும் இந்நோய் பரவும்  வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஆத்துடன் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும் தும்மும் போதும் வெளியாகும் நீர்த்துளிகள் மற்றவர் மீது படுவதன் மூலம் அல்லது அவற்றை சுவாசிப்பதன் மூலம் இந்நோய் பரவலாம் என்றும் கூறபோடுகின்றது.

ஒருவருக்கு "குரங்கு அம்மை"யின் பாதிப்பு ஏற்பட்டால்  5 நாட்களிலிருந்து 21 நாட்களுக்குள்ளாக நோயின் முதல் அறிகுறி தென்படலாம். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம் மற்றும் சோர்வடைதல் போன்றன அறிகுறிகளாகும். இவ்வாறான அறிகுறிகள் கண்டு  5 நாட்களுக்குள் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு சிகப்பு நிறப்புள்ளிகள் தோன்றி பின்னர் அவை கொப்புளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்த கொப்புளங்கள் மறைந்து உதிர்ந்துவிடும்.

இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் முறையான சிகிச்சை மேற்கொண்டால்  சில வாரங்களில் குணமடைவர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

குரங்கு அம்மையைக் குணப்படுத்த தற்போது தனியாக மருந்துகள் எதுவும் கிடையாதெனவும், இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுப்பது முக்கியமானது என்றும் கூறப்படுகின்றது.


Post a Comment

Previous Post Next Post