நான் டாக்டர் ஷாபி

நான் டாக்டர் ஷாபி


அனுமதியில்லாமல் பல சிங்களப் பெண்களுக்கு கருத்தடை செய்யப்பட்டதாக ஒரு புரளியைக் கிளப்பி நாட்டில் இஸ்லாமியர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் ஒரு இனவாத மோதலை உருவாக்க நினைத்தவர்களுக்கு இன்று முகத்தில் அழகாய் அறைந்து விட்டார் டாக்டர் ஷாபி அவர்கள்.

பிரசவத்தின் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் அறுவை சிசிக்சைகளின்போது , சிங்களப் பெண்களுக்கு - அவர்களின் அனுமதியில்லாமல்  கருத்தடை செய்தார் என்பது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 60 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்ட டாக்டர் எஸ்.எம்.எம். ஷாபி என்பவரை, மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறும், அவர் கட்டாய விடுமுறையில் (Compulsory leave) அனுப்பப்பட்டிருந்த காலப் பகுதிக்குரிய சம்பளத்தை, அவருக்கு வழங்குமாறும் சுகாதார அமைச்சு உத்தரவிட்டது.

குருணாகல் போதனா வைத்தியசாலையில் பிரசவம் மற்றும் பெண்ணியல் நோய் மூத்த மருத்துவராக கடமையாற்றி வந்த நிலையில், 2019ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் டாக்டர் ஷாபி கைது செய்யப்பட்டார்.

வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள்,இருந்ததாகவும் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாகவும் ,அவர்களின் ஆணைப்படிசிங்களப் பெண்களுக்கு அவர்களின் அனுமதியின்றி கருத்தடை செய்தது போன்ற பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்தார்கள்..

நான்காயிரம் பெண்கள் இந்த கருத்தடையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகள்  போலியான செய்திகளை வெளியிட்டு  நாட்டில் ஒரு நிம்மதியின்மையை உருவாக்கினார்கள். பொய் சாட்சிகளை முன்னிறுத்தினார்கள் .சிங்களப் பெண்களுக்கு பணம் கொடுத்து சாட்சி சொல்ல வைத்தார்கள் .

டாக்டர் ஷாபிக்கு எதிராக , அவர் மோசடியாக 4000 பெண்களுக்கு கருத்தடை செய்தார் என 615 முறைப்பாடுகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அரச தரப்பு சார்பாகத் அறிவிக்கப்பட்டது.

இருந்தபோதும் அவருக்கெதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் கிடையாது என, நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்ப கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் டாக்டர் ஷாபிக்கு பிணை வழங்குவதற்கு - அரசு தரப்பில் ஆட்சேபனைகளும் வெளியிடப்படவில்லை.

இவற்றினையடுத்து 2019ஆம் ஆண்டு ஜுலை 25ஆம் திகதியன்று குருணாகல் பிரதான நீதவான் நீதிமன்றம், டாக்டர் ஷாபியை பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டது.

அதேநேரம் நாடு முழுவதும் முஸ்லிம்களை கேவலமாக சித்தரித்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தினார்கள்.மீடியாக்கள் தங்கள் இஷ்டப்படி அரசாங்கதின் கைகூளிகளாய்  முஸ்லிகளை இழிவு படுத்தும் வேலைகளை செய்தார்கள். அன்றைய நல்லாட்சி அரசாங்கம் மவுனம் காத்தது.இனவாதம் பேசி அரசியல் ஆதாயம் தேடியவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டங்கள் அமிர்தமாயிருன்தது.

இந்த ஒரு பொய்யான செய்தியால் முழுநாடும் முஸ்லிகளை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தது.இனவாதிகளுக்கு இந்த ஒரு விடயம் சாதகமாய் இருந்தது, 

 நீதி மன்றங்களும் காவல்துறையும்  அரசாங்கத்தின் அடிவருடிகலாய் இருந்ததாள் சிறுபான்மை மக்களுக்கு நீதி கிடைப்பது இலங்கையில் அரிதாகவே இருந்தது.

உண்மை நேர்மை,உழைப்பு ஒருநாள் ஜெயிக்கும் என்பதற்கு உதாரணமாக இன்று டாக்டர் ஷாபி அவர்கள் ஜெயித்துவிட்டார்.

அவர் கட்டாய விடுமுறையில் (Compulsory leave) அனுப்பப்பட்டிருந்த காலப் பகுதிக்குரிய சம்பளத்தை, அவருக்கு வழங்குமாறும் சுகாதார அமைச்சு உத்தரவிட்டது.

அதன்படி டாக்டர் ஷாபிக்கு ரூபா  2.67 மில்லியன் சம்பளம் வழங்கப்பட்டது 

அந்தத் தொகையை நாட்டில் ஏற்பட்டிருக்கும் அத்தியாவசிய மருந்துத் தட்டுப்பாட்டை நீக்க நன்கொடையாக வழங்கி இனவாதிகளின் முகத்தில் அறைந்து "நான் டாக்டர் ஷாபி"  என்று  அழுத்தமாக சொல்லிவிட்டார். 


Post a Comment

Previous Post Next Post