இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமான ஹைஃபா மீது ஹெஸ்பொல்லா போராளிகள் ஏவுகணைத் தாக்குதல்!

இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமான ஹைஃபா மீது ஹெஸ்பொல்லா போராளிகள் ஏவுகணைத் தாக்குதல்!

கடந்த திங்களன்று ஹெஸ்பொல்லா போராளிகள் இஸ்ரேலின் மீது கடும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதன் முறையாக  ஃபாடி 1 ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதலை நடாத்தியுள்ளது இஸ்ரேலுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்தியதரைக் கடல் துறைமுகமான ஹைஃபாவில் உள்ள இஸ்ரேலிய கர்மால் இராணுவ தளத்தில் இந்த ஏவுகணைத் தாக்குதல் நடாத்தப் பட்டுள்ளது.

ஏவுகணைகள் ஹைஃபா மற்றும் திபெரியாஸ் ஆகிய இரு பகுதிகளிலும் மேலும் பல பகுதிகளைத் தாக்கியதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. மேலும், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும், பல கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் ஒப்புக்கொண்டது.

இஸ்ரேலால் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹெஸ்பொல்லா தெரிவித்துள்ளது. "இஸ்லாமிய போராளிகள்  லெபனானையும் அதன் உறுதியான,  மக்களையும் பாதுகாக்க தயாராக இருக்கும்" என்று ஹெஸ்பொல்லா தெரிவித்துள்ளது. 

திங்கட்கிழமை  இரண்டாவது ஏவுகணை தாக்குதலில் ஹைஃபாவின் வடக்கே உள்ள பகுதிகளை குறிவைத்ததாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.  திங்கட்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி சுமார் 135 ஏவுகணைகள் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்ததாக இஸ்ரேல் ராணுவம் ஒப்புக்கொண்டது. (1400 GMT).

அதே நேரம் சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணி பேராசிரியர் ஜான் மியர்ஷைமர் கருத்துத் தெரிவிக்கையில் "இஸ்ரேலால் ஹெஸ்பொல்லாவை ஒரு போதும் வெல்ல  முடியாது" என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

நெதன்யாகுவின் தலைமையின் கீழ் உள்ள சியோனிச ஆட்சியானது, ஹெஸ்பொல்லா மற்றும் ஹமாஸை  அழிப்பதில் வெற்றி பெற்றதாக ஒரு மாயையை உலகுக்கு காட்டுகின்றது. ஆனால் போராளிகள் மீண்டும் மீண்டும் இஸ்ரேலுக்கு பதில் அடிகளை தினமும் கொடுக்கின்றனர்.

அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் போராளிகளுடன்,இஸ்ரேலால் ஒரு நாள் தக்குப்பிடிப்பதும் சிரமம் என்று அவதானிகள் தெரிவிக்கின்றார்கள்.

மாஸ்டர்



 



Post a Comment

Previous Post Next Post