
வீடணனைக்காத்தஇலக்குவன்
ராவணன் லக்குவன்மேல் மோகப் படையை
ஏவினான் பாய்ந்தது வந்து.
வீடணன் லக்குவனை நாராய ணத்திரத்தை
வீசுமாறு வேண்டினான் அங்கு.
ராவணன் கண்முன் படைவலிமை வீழ்ந்தது!
வீடணனைப் பார்த்தான் சினந்து.
வேற்படையை ராவணன் வீடணன்மேல் ஏவிவிட்டான்!
தோற்ப துறுதியென் றான்
வீடணன் லக்குவனைப் பார்த்தே பகர்ந்ததும்
ஊடறுத்தான் லக்குவன் அங்கு.
வேற்படையை மார்பிலே வாங்கிச் சரிந்துவிட்டான்!
ஈடற்ற லக்குவன் தான்.
ராவணன் தேர்க்குதிரை சாரதியை வீடணன்
பாரதிர நின்றான் அழித்து.
விண்ணில் எழுந்தேதான் .ராவணன் வீடணன்மேல்
அம்புகளை எய்தான் விரைந்து.
ஆயிரம் அம்புகளை அங்கே அனுமன்மேல்
மாரிபோல் வீசினான் பார்த்து.
இலக்குவன் வீழ்ந்ததால் வெற்றிதனதே
உளத்தால் நினைந்தான்
நகர்ந்து.
இலங்கை நகருக்குள் ஆணவங் கொண்டே
உலவுதல்போல் சென்றான் நிமிர்ந்து.
மீண்டும் மருந்துமலை!
அனுமனை மீண்டும் மருந்தைக் கொணர
அனுப்பினர் சென்றான் பறந்து.
வந்ததும் லக்குவன் மீண்டெழுந்தான்! ராமனிடம்
சொன்னார் நடந்ததைத் தான்.
அனுமனை ராமன் சிரஞ்சீவி யாக
மனதார வாழ்த்தினான் பார்த்து.
இலக்குவனை ராமன் பலபடப் போற்றிச்
சுரந்த புகழ்மொழியைக் கேள்:
அரசன் சிபியோ புறாவினைக் காத்தான்!
வரலாறாய் நிற்கின்றான் இன்று.
இலக்குவனே! நீயோ அவனையும் விஞ்சி
கவர்ந்தாய் கடமையைச் செய்து.
தாய்ப்பசு கன்றினைக் காப்பதுபோல் சான்றோர்கள்
நேயமுடன் காப்பார்கள் இங்கு
இறுதிப்போர்
மூலபலச் சேனை அழிந்ததை தூதர்கள்
மூலமாகக் கேட்டிருந்தான் வேந்து.
ராவணன் நம்பவில்லை! லக்குவனைக் கொன்றுவிட்டேன்!
ராமனும் வாழமாட்டான் இங்கு.
வெற்றி எனதே! எனச்சொன்னான் ராவணன்!
கொக்கரித்தான் நம்பாமல் தான்.
அரண்மனை உச்சிக்குச் சென்றே களத்தை
அளந்தான் கண்களால் தான்.
வானரச்சேனையின் ஆரவாரம் கேட்டது!
பூண்டான் போர்க்கோலந் தான்.
ராவணன் வக்கிரமாய்ச் சொன்னதைக் கேளுங்கள்!
பாவத்தின் தூதுதான் சாவு.
"போரில் இராமன்
இறந்தால் துடித்தழுவாள்
நேரிழை சீதைதான் இன்று.
நானிறந்தால் மண்டோ தரிதான் கதறுவாள்!
பாரில் இரண்டிலொன்று உண்டு."
இலக்குவனை நாடி மகோதரன் சென்றான்!
விலகிடும்முன் ராமன்தேர் கண்டு
இடித்தான் மகோதரன் தன்தேரால் சென்று!
மதியிழந்தே போர்தொடுத்தான் பார்.
ராமனை நோக்கிக் கணைகளை வீசினான்!
ராமன் தொடுத்தான் சரம்!
தலையறுந்து வீழ்ந்தான் மகோதரன் அங்கு!
நிலைகுலைந்த ராவணனைப் பார். .
ராவணன் வீணைக் கொடிபறக்கும் தன்தேரில்
ராமனுடன் போரிட்டான் நின்று.
ராவணன் விட்ட படைக்கலத்தைப் போரிடாமல்
ராமன் தவிர்த்தான் முயன்று.
ராமனின் தேர்க்கொடியை ராவணன் சீரழித்தான்!
மாதலிமேல் விட்டான்பார் அம்பு.
ராமன் இராவணனின் தேர்க்கொடியைச் சீரழித்தான்!
ராமன்தேர்க் கோலத்தைப் பார்த்து
கருடனோ தேர்க் கொடியாய் மாறி
பெருமையுடன் நின்றான் பறந்து.
(தொடரும்)
பெருமையுடன் நின்றான் பறந்து.

கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments