
உத்தரகாண்ட்டில் ஒரு பள்ளியில் உள்ள மாணவர்கள் திடீரென வெறி பிடித்ததுபோல் கூச்சலிட்டு, அலறிய காட்சி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. மாணவர்கள் கூச்சலிடுவதும், அலறுவதும், தலையில் அடித்துக்கொண்டு உருள்வதும் போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம், பாகேஷ்வரில் உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் பெரும்பாலான மாணவிகள் திடீரென வெறி பிடித்ததுபோல் கூச்சலிட்டு, அலறிய காட்சி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஹிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதுபோன்ற சைகைகளில் வெறிபிடித்ததுபோல் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
ஹிஸ்டீரியா என்றால் என்ன?
மாஸ் ஹிஸ்டீரியா என்பது ஒரு குழுவிற்குள் நிகழும் அசாதாரணமான மற்றும் இயல்பற்ற நடத்தைகள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது ஒரு வகையான மனமாற்றக் கோளாறு அல்லது மன அழுத்தத்தால் தூண்டப்படும் வெறிபிடித்தது போன்ற அறிகுறிகளை உள்ளடக்கிய மனநல நிலை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஹிஸ்டீரியா நோய்க்கு அதிகாரப்பூர்வ சிகிச்சை இல்லை என்பதே மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயம்.
SOURCE:asianetnews


0 Comments