
அச்சம்பவம்
என்னை முற்றிலுமாய்
வேரறுக்கும் முன்பு;
உங்களிடம்
அதைச் சொல்ல நினைக்கிறேன்.
உறவுகளே
விரைந்து வாருங்கள்.
வழக்கம்போல்
வார்த்தை ஒன்றினைத்
தந்து விட்டாய்.
எப்போதும் போல்
சிரமம் பாராமல்
ஜீவனைத் தேடுகிறேன்
நான்.
பொழுது
பொதுவென்றாலும்
அவரவருக்கான
வாழ்க்கைப் பாடத்தை
அவரவர்களே
வாசித்துக் கடக்கிறார்கள்.
என்னைப் பலரோடு
அனுமதித்திருக்கிறது
இந்த உலகம்.
ஒருநாளும் அவர்களாக
நான் ஆனதே இல்லை.
என்னைப் புறத்தில்
தாக்கியதற்கு
நீங்கள் வருந்துகிறீர்கள்.
அகத்தின் ரணங்களை
நான் மட்டுமே அறிவேன்.
மரியாதை நிமித்த வணக்கங்கள்
எதிர்ப்படும் முகங்களின்
உடமை ஆகிறது.


0 Comments