Ticker

6/recent/ticker-posts

குழப்பம் முடியும் வரை இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பிணை வழங்கப்படாது


குழப்பம் முடியும் வரை இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பிணை வழங்கப்படாது என 
ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Deborah Brautigam தெரிவித்துள்ளார்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கருத்துப்படி, சர்வதேச நாணய நிதியம் பிணை எடுப்பில் இறங்குவதற்கு முன், இலங்கை அதன் தற்போதைய குழப்ப நிலையில் இருந்து வெளிவர வேண்டும்.

இலங்கை தொடர்ந்து நெருக்கடி நிலையில் இருக்கும்போது IMF அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ள முடியாது. 

எனவே, அரசாங்கம் நிலைபெறும் வரை,  IMF எந்த பேச்சு வாராத்தைகளிலும் உடன்பாடு இல்லை என்று வெள்ளிக்கிழமை   Professor Deborah Brautigam CNBC இன் "Squawk Box Asia" இற்கு தெரிவித்துள்ளார்.


இலங்கை பல மாதங்களாக போராட்டங்களால் சிதைந்து, சுதந்திரத்திற்குப் பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.

உணவு, மருந்து, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் பொது மக்கள்   திணறி வருகின்றனர்.
அரசின் தவறான நிர்வாகத்திற்கு எதிராக மக்கள்  கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

கடந்த வாரம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி, அவரது இல்லத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதையடுத்து அவர் பதவி விலகினார்.

ராஜபக்சேவின் மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்த கடந்த மே மாதம் 73 வயதான ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றார்.

நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்துள்ளனர். 


இந்த தலைமை மாற்றங்கள் எதிர்ப்பாளர்களை திருப்திப்படுத்துமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன்  இணைந்து செயற்பட வேண்டும்.

IMF அதன் நிதி உதவிகளை ஒழுங்காக பெறுவதற்கு அரசாங்கத்திடம் இருந்து உத்தரவாதம் தேவை. அதன் பிற்பாடே அரசின் வருவாய்  மற்றும் அவற்றின் செலவுகள் சிறப்பாக பொருந்துவதை உறுதி செய்ய IMF முயற்சிக்கும் என்றும் அவர் கூறினார்.

அதனால், இலங்கை இதற்கு  உத்தரவாதம் வழங்க முடியாவிட்டால், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எந்த உதவிகளும் எதுவும் வராது என்று Professor Brautigam கூறினார். 

தொடர்ந்தும் நெருக்கடி நிலவும் வரை இலங்கையால் தேவையான ஆதரவை  வழங்க முடியாது போகும்  என்றும் அவர் கூறினார்.

அச்சந்தர்பத்தில் தான் நாட்டின் கடனை நிலையான நிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக இலங்கையின் கடனாளிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் உறுதியளிக்கும் என்றும் அவர் கூறினார்.

அந்த உத்தரவாதங்கள் இல்லாமல் IMF நாட்டிற்கான ஒரு திட்டத்தை முன்னோக்கி செல்ல முடியாது, என்று அவர் மேலும் கூறினார் .

(பேருவளை ஹில்மி )

Post a Comment

0 Comments