
திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் நடாத்தப்பட்ட கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு அகில இலங்கை நனகுண அறக்கட்டளை அமைப்பு இன்று 31/07/2022 திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் நடத்தப்பட்ட கௌரவிப்பு விழாவில் "தேசாபிமானி லங்கா புத்ர, விஸ்வ கீர்த்தி" என்ற கௌரவ விருது வழங்கி கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது
அந்நிகழ்வில் ஊடகம் மற்றும் கலைத்துறை பங்களிப்புக்காக தேசாபிமான லங்கா புத்திர விஸ்வ கீர்த்தி என்ற பட்டம் வழங்கப்பட்டு கலைஞர்கள் இயக்குனர்கள் மற்றும் துறை சார்ந்தவர்களை சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தனர்.

இந்த நிகழ்வில் முதன் முறையாக 5 முஸ்லிம்களுக்கு விருது வழங்கப்பட்டது
.சமூக நல்லிணக்கம் நேர்த்தியான ஊடக வழிநடத்தல் கலைத்துறை மற்றும் திரைக்கதைகள் உருவாக்கம் போன்ற துறைகளுக்கு ரின் டிவியின் ஸ்தாபகரும் இயக்குனருமான GGI JABEEN MOHAMED
மற்றும் ரின் டிவியின் நிறைவேற்று அதிகாரிகள் இருவருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
இந்நிகழ்வில் இலங்கையின் திரைப்பட ஊடக கலைஞர்கள் இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர்கள் கதை ஆசிரியர்கள் நடிகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிட்ட தக்க விடயம்
.
இந்நிகழ்வு இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் திரையரங்கில் நடைபெற்றது


0 Comments