மலை மனிதன்

மலை மனிதன்

காதலுக்காக மலைகளை அசைக்க முடியும் என்று சொல்பவர்களும் உண்டு. இது உடல் ரீதியாக சாத்தியமில்லாமல் இருக்கலாம், ஆனால் 'மலை மனிதன்' என்று அழைக்கப்படும் தஷ்ரத் மஞ்சி என்பவர் அந்தப் பெயருக்கு பொருத்தமாக இருந்தார்.

 ஒரு நாள், அவரது மனைவி அருகிலுள்ள மலையைக் கடக்கும்போது வழுக்கி விழுந்து  கடுமையான காயத்துக்குள்ளானாள். 

அவளுக்கு விரைவான மருத்துவ உதவி தேவைப்பட்டது, ஆனால் அவர்களது சிறிய கிராமத்தில் மருத்துவ வசதிகள் இல்லை.

வைத்தியசாலைக்கு செல்வதென்றால் மலைகளை கடந்து 70 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும்.

வாகனங்களும் அந்தக் கிராமத்திற்கு வருவதில்லை . 

பதட்டத்தோடு கை வைதியங்களை செய்தார் தஷ்ரத் மஞ்சி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக,   பலத்த காயங்கலோடு இருந்த அவரது மனைவி இறந்து விட்டார்.

மறுத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழந்த மனைவியின் நினைவாக  தனது கிராமத்திற்கு மருத்துவ உதவியை எளிதாக அணுகுவதற்காக மலை வழியாக ஒரு சிறிய பாதையை செதுக்க முடிவு செய்தார்  தஷ்ரத் மாஞ்சி

மலைப்பாதையை செப்பனிட்டுவிட்டால் அந்த ஆஸ்பத்திரிக்கு ஒரு கிலோமீட்டரில் போய்விடலாம்.

ஊர் சேர்ந்து தேரிழுக்கலாம் வாருங்கள் என்று கேட்டுப்பார்த்தார். ஒருத்தனும் மசியவில்லை,

“மலையைச் செப்பனிடுவது நடக்கிற வேலையா தஷ்ரத் ? போ. போய் உன் ஆடுகளுக்குத் தண்ணி காட்டு….”என்றார்கள்.

நொந்துபோன தஷ்ரத் வீட்டிலிருந்த ஆட்டுக்குட்டிகளை விற்றுவிட்டு அந்தப் பணத்தில் ஒரு கடப்பாரை,  மண்வெட்டியையும்  வாங்கினார்.

தினமும் சாயந்தரம் மலைக்குன்றுக்குப் போய்,அந்தக் கரடுமுரடான கற்பாறைகளை வெட்ட ஆரம்பித்தார்.

எளிதில் நடக்கிற விஷயமா?அதுவும் ஒத்தை ஆளால்?

காய்ந்த சுள்ளிகளை,விறகுகளைப் பொறுக்கி வந்து,இறுகிய பாறைகளின்மீது போட்டுக் கொளுத்தினார். 

பாறை நன்கு சூடானபிறகு,அதன்மீது தண்ணீரை ஊற்றி இளகவைத்தார். பிறகு பாறைகளைப் பிளப்பது முன்னைவிட சற்றுச் சுலபமானது.

சோற்றுப்பாட்டுக்காக பகலெல்லாம்அடுத்தவர் வயல்களில் கூலிவேலை.சூரியன் இறங்கியதும் மலையை நோக்கி
அசகாயப் பிரயத்தனப் பயணம் !

ஊரே கூடிநின்று கேலி பேசும்.

எதிர்த்து ஒரு வார்த்தை?
ஊஹும்.
‘போய்க் கொண்டேயிருந்தார் தஷ்ரத்….’

ஒருநாளா இருநாளா? சத்தியம் மக்களே….

22 வருஷங்கள்!

1960இல் கிளர்ந்த நெஞ்சுரம்,சேவை மனப்பான்மையாக மலர்ந்து,1982இல்,அருமையான ஒரு பாதையாக உருவெடுத்தது.

30 அடி அகலத்தில் 360 அடி நீளத்துக்கு மலைப்பாதை. இனி ஆஸ்பத்திரிக்கு 70 கிமீ போகவேண்டாம்.

இப்போது ஊரே தஷ்ரத்தைத் தோளில் தூக்கிக் கொண்டாடியது. பஞ்சாயத்தில் பொன்னாடை போர்த்தினார்கள். ‘மலை மனிதன்’ என்ற பட்டம் வேறு.

தஷரத் இறந்தபோது,பிஹார் அரசாங்கம் அரசு மரியாதையுடன் அவர் உடலை தகனம் செய்தது.

அதை,மரியாதை என்பதைவிட,குற்றவுணர்வு என்று சொல்லலாம்தானே?




Post a Comment

Previous Post Next Post