Ticker

6/recent/ticker-posts

ரூ.36 மில்லியன் Wi-Fi antenna மோசடியில் இருவர் கைது


36 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக இரண்டு சந்தேக நபர்கள் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளனர்.

34 மற்றும் 37 வயதுடைய சந்தேக நபர்கள் மட்டக்குளி மற்றும் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் 

பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வருவது. சந்தேக நபர்கள் ஒரு தனியார் நிறுவனத்திற்கு Wifi antennas களை வழங்குவதாக கூறி, அப் பொருட்களை வழங்காமல், குறித்த நிறுவனத்திற்கு 36,989,684 ரூபாய் நிதி மோசடி செய்துள்ளனர்.

புகாரைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் வாக்குமூலம் அளிக்க நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID)க்கு அழைக்கப்பட்டனர், பின்னர் அவர்கள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டனர்.

அவர்கள் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு டிசம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

tamilmirror

 


Post a Comment

0 Comments