ரணிலுக்கு இது கடைசி அரசியல் வாழ்க்கை என்று தெரியும் .இனி மக்கள் ஆதரவுடன் அரசியல் செய்வது ரணிலுக்கும் ராஜபக்சாக்களுக்கும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
ராஜபக்சாக்கள் திரும்பவும் அரசியலுக்கு வந்தாலும் ரணிலால் அது முடியாது.
இன்று இலங்கை மக்கள் ராஜபக்சாக்கள் போன்ற திருடர்களைவிடவும் ,அவர்களை தப்பவிட்ட ரணிலின் மீது படு சீற்றத்தில் இருக்கின்றார்கள்.
உலகத்தில் முதன் முதலாக மக்கள் ஆதரவு இல்லாத பிரதமராகவும்,ஜனாதிபதியாகவும் பதவி வகித்தவர் என்ற பெருமை ரணிலுக்கு மட்டுமே.
இந்நிலையில் ராஜபக்சர்களுக்கு தண்டனை வழங்குவதை விடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பதை நாட்டு மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
ரணிலின் இந்த அடக்கு முறை உலக நாடுகளிடையே , மிகவும் மோசமான ஒரு நிலையை உருவாக்கும்.உதவிகள் நிறுத்தப்படும். பயணிகளின் வருகை குறைந்துவிடும் போன்ற முக்கியமான சில விடயங்கள் தடைபடும் நிலை உருவாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்,
திருடர்களை தப்பவிட்டு திருடியவர்களை காட்டிக்கொடுத்தவர்களை துன்புருத்துவது எந்தவிதத்தில் நியாயம்?
என்று நாட்டு மக்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் .இது சர்வதேசத்தில் ரணில் ராஜபக்சவுக்கு மிகப்பெரும் இழுக்கை சேர்க்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்,
தன்னுடைய ஆட்சியில் திருடர்கள் தப்புவதற்கு எப்பொழுதும் வழிஅமைத்துக்கொடுப்பவர் ரணில்.அந்த வகையில் 2006 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த மிகப்பெரும் VAT கொள்ளையை இன்றுவரையிலும் பாதுகாப்பவர் ரணில் விக்கிரமசிங்கதான்.
VAT கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் இன்றுவரையிலும் சுதந்திரமாக நாட்டிலும் வெளிநாட்டிலும் சுற்றிக் கொண்டிருக்கின்றதை காணக்கூடியதாய் இருக்கின்றது.
ரணிலுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒருசிலர் VAT கொள்ளையில் சுருட்டிய பணத்தில் சொத்துக்களை குவித்துள்ளதாகவும்,300கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் ரணிலுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்ற ஒருவரின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படியான மிகப்பெரும் பொறுப்பு ரணிலுக்கு இருப்பதால் அவருக்கு நாட்டைப்பற்றிய கவலை இல்லை.
ரணில் விக்ரமசிங்க வீட்டுக்குச் சென்றதை மறந்து போயுள்ளார், கடந்த பொதுத் தேர்தலில் வீட்டுக்குச் சென்றவர் தேசியப்பட்டியலில் மூலமே பிரவேசித்தார்.
கொழும்பு மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் ரணில் விக்ரமசிங்க எத்தனை வாக்குகளைப் பெற்றார் என்பது கூட எனக்குத் தெரியாது. தனிப்பட்ட விருப்பு வாக்குகளை எடுக்க முடியவில்லை.
இன்று ராஜபக்சர்களை பாதுகாக்க முன் வந்துள்ளார். ராஜபக்சர்களுக்கு தண்டனை வழங்குவதை விடுத்து, மக்கள் போராட்டத்தை நகைப்பாக பார்த்து எடைபோட ரணில் முற்பட்டால் அதற்கு இந்த நாட்டு மக்கள் அனுமதிக்கத் தயாராக இல்லை.
எனவே இந்தப் போராட்டத்திற்காக முன் நின்ற மக்களுக்கு ஒரு நோக்கம் இருந்தது, நம்பிக்கை இருந்தது, கோரிக்கைகள் இருந்தன, அந்தக் கோரிக்கைகள் அனைத்தும் இன்னும் அப்படியே இருக்கின்றன.
ஆனால் போராட்டத்தால் எழும் பல்வேறு பிரச்சினைகளை ஒடுக்கும் வகையில் அதிபராக ரணில் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
நீச்சல் தடாகத்தில் குளித்தவர்களையும், அந்த மாளிகையைத் தாக்கிய குழுக்களையும் பார்த்து, இவர்களையெல்லாம் வேவு பார்த்து தண்டிக்கச் செல்கிறார்.
ராஜபக்சர்களை அடித்து விரட்டிய, ராஜபக்சர்களின் அதிகாரத்தை விரட்டியடித்த இந்நாட்டு பிரஜைகள் கூண்டில் அடைக்கப்படுவதை நாட்டு மக்கள் ஒருநாளும் விரும்பப்போவதில்லை.
ரணிலுக்கு தற்போது இருக்கின்ற பிரச்சினை,கிடைத்த பதவியை தக்கவைத்துக்கொள்வது.இவரை பாதுகாப்பது ராஜபக்சாக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே. ஒருசில சாக்கடைகளும் பணத்திற்காக இடையே சேர்ந்துகொண்டு நாட்டை கூருபோடுகின்றதை இனியும் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொல்லையர்களிடமிருந்து இந்த நாட்டை பாதுகாப்பது அவசியம்.
மாஸ்டர்
0 Comments