நாட்டில் தற்போது பெண்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது

நாட்டில் தற்போது பெண்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது

நாட்டில் தற்போது பெண்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பெரும்பாலான பெண்கள் அழகு கலை நிலையங்களின் ஊடாக போதைப் பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது அவர் கருத்துரைக்கையில், "தவறான பொருட்களை வேண்டாம் என்று கூறக்கூடிய நிலையில் பாடசாலை மாணவர்கள் இருக்க வேண்டும்

இதேவேளை, அதிகளவான பெண்களிடம் தற்போது ஐஸ் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது.

குறிப்பாக குருநாகல் மாவட்டத்திலேயே இந்த உயர்வு பதிவாகியுள்ளது. ஆண்களை விடவும் பெண்களுக்கே பாதிப்பு அதிகமாகவுள்ளது.

அழகு கலை நிலையங்களின் ஊடாக இந்த பழக்கத்துக்கு பெண்கள் அடிமையாகின்றனர்" என்றார்.

அதேவேளை, அடிக்கடி அழகு கலை நிலையங்களுக்கு செல்லும் தங்களது பிள்ளைகள் குறித்து பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.


 


Post a Comment

Previous Post Next Post