ஆபத்தான மூன்றாம் நாடுகள்' பட்டியலிலிருந்து பிரித்தானியா பாகிஸ்தானை நீக்கியது

ஆபத்தான மூன்றாம் நாடுகள்' பட்டியலிலிருந்து பிரித்தானியா பாகிஸ்தானை நீக்கியது

அதிக ஆபத்தான மூன்றாம் நாடுகள்' பட்டியலிலிருந்து பிரித்தானியா பாகிஸ்தானை நீக்கியுள்ளது. 

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ டுவிட்டரில் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார். 

நிதி நடவடிக்கை செயற்குழு பரிந்துரையின் கீழ், பிரித்தானியா அரசாங்கம் 2021ம் ஆண்டு ஏப்ரலில் அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்திருந்தது.

இந்த நிலையில், "அதிக ஆபத்துள்ள மூன்றாம் நாடுகள்" பட்டியலில் இருந்து பாகிஸ்தான், நிகரகுவா ஆகிய நாடுகளை பிரித்தானியா அரசு நீக்கியுள்ளது.

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்த்துப் போரிடுவதில் பாகிஸ்தானின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வரவேற்கப்படுவதாக நிதி நடவடிக்கை செயற்குழு கூறியுள்ளது.

பாகிஸ்தான் பணமோசடி மீதான ஆசிய-பசிபிக் குழுவுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று பிரித்தானியா அரசு கருவூலம் வெளியிட்டுள்ள ஆலோசனை அறிவிப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 


Post a Comment

Previous Post Next Post