மொழி பெயர்புக் கவிதைகள்

மொழி பெயர்புக் கவிதைகள்


நான் ஒன்று
நீ பூஜ்யம் என்கிறாய்
உனக்குப் பின்னால் நிற்பதில்
எனக்கொரு பிரச்சினையும் இல்லை!

You say,
“You are one and me zero"
I have no problem
To stand behind you

இரவுகளில உலவும்
தூக்கமற்ற மனங்கள்
இல்லாமையை போக்கும்
கவிதை வரங்கள்

Sleepless minds,
Surfing at night.
The poetic gifts of
Eliminating the nothingness

அகலின் சுடருக்குள்
மறைகிறது அடரிருள்
மோனத் தவத்தில்
வெற்றிடம் நிரப்புகிறாள் ஊர்மிளை!

Disappearing darkness               
In the flame of Akal
Urmila fills the void
In the penance of quiescence

உதறித்தான் பார்க்கிறேன்
விடாது கூடுகிறது
சுழலும் வாழ்க்கையில்
ஒரு நாள்

I try to renounce out
But it tends to add only
One another day
In a revolving life

சுத்தியலால் சுக்கு
நூறாக்கிட எண்ணினாய்
உளியால் செதுக்கிய
அழகிய சிற்பமானேன்..!

To make me burst into pieces
You tended to hammer badly
Surprisingly now I am a beautiful sculpture
Carved by a chisel










அன்புச்செல்வி சுப்புராஜூ
சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
Translated by Raju Arockiasamy
Trichy, Tamilnadu, India.


மேலும்..... கவிதைகள் படிக்கவும் 


 


1 Comments

  1. வேட்டை வாரஇதழில்... அன்புச்செல்வி அக்காவின் தன்முனைக்கவிதைகள் ... நான் மொழிபெயர்த்தவை...
    நன்றிகளும், வணக்கங்களும் ஆசிரியர் குழுவிற்கு !

    ஆசிரியருக்கு சிறு வேண்டுகோள்... பிழைகளை சற்று கவனிக்கவும்!

    ReplyDelete
Previous Post Next Post