Ticker

6/recent/ticker-posts

Ad Code



விறலி!



உயரப் பறக்க
ஆசைக் கொண்டேன்
நீ பெண் என்றார்
மேலும் பறந்தேன்

அத்தனையும் இன்று
பொய் ஆகிப் போகிறது
அரிச்சந்திரன் கொட்டகைக்கு
கூரை மாற்றத் தடையாம்

நிச்சயம் யாரேனும்
தழவி இருப்பார்
பெண் எனும் எனது
புத்தகப் பக்கங்களை

முழங்கால் நனையும் வரை
நீராடி நகர்கிறேன்
நதியோடிய நீளமெல்லாம்
பெண்மையின் பறையாட்டம்

நிச்சயம் நான்
நகரத் தயாராகிறேன்
பச்சையத்தை வட்டமாக்கிய
பெண் வட்டத்தைத் விட்டு



கவிஞர் சே கார்கவி


 


Post a Comment

0 Comments