தம்பு மேனிலைப் பள்ளியில் குழந்தைகள் தின இலக்கிய மன்ற விழா

தம்பு மேனிலைப் பள்ளியில் குழந்தைகள் தின இலக்கிய மன்ற விழா


கோவை பிரஸ் காலனியில் உள்ள தம்பு மேனிலைப் பள்ளியில் குழந்தைகள் தின இலக்கிய மன்ற விழா 14-11-2022 அன்று திங்கள் கிழமை மதியம் 2-00 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு கே.இரமேஷ் அவர்கள் தலைமை தாங்கினார்.

தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது.
 
மேனாள் தலைமை ஆசிரியர் திரு சௌந்தரராஜன் ஐயா, திரு குணசேகரன் ஐயா, மற்றும் ஆசிரியப் பெருமக்கள் முன்னிலையில்
மாணவர்களிடையே  உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் அமைப்புச் செயலாளர்.குறள் யோகி, தமிழ்ச் செம்மல், முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களிடம் குழந்தைகள் தின விழா குறித்தும், தமிழின் மேன்மை, திருக்குறளின் பெருமை குறித்தும்,கல்வி தரும் வல்லமை யையும் குறித்து 
 சிறப்புரையாக மாணவர்கள் மனங் கொள்ளும் வகையில் எழுச்சி உரை ஆற்றினார். 



அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி, சிறப்புச் செய்யப்பட்டது.

தொடக்கத்தில் மாணாக்கி பா.புவனேஸ்வரி வரவேற்புரை கூறினார்.தொடர்ந்து தமிழ்த்துறையும், ஆங்கிலத் துறையும் நடத்திய பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
நிறைவாக பள்ளி மாணாக்கி கா.மதுசிறீ நன்றி நவில நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. 

தமிழாசிரியர் திரு விவேகானந்தன் உள்ளிட்ட ஆசிரியப் பெருமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.


 


1 Comments

  1. சுடச்சுட செய்திகள் தரும் வேட்டை மின்னிதழின் அறப்பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா 👍💗❤️🙏

    ReplyDelete
Previous Post Next Post