Ticker

6/recent/ticker-posts

Ad Code

கிட்னியை விற்க முயன்று 16 லட்சத்தை கோட்டை விட்ட மாணவி..!

கடந்த திங்கள் கிழமை ஆந்திர மாநிலம் குண்டூரில் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றிருக்கிறது. அந்த முகாமிற்கு வந்த நர்சிங் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் இணையம் மூலம் தனக்கு பழக்கமான நபர் ஒருவர் தன்னை ஏமாற்றி தன்னிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாகவும், பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். மாணவியின் புகார் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கியபோது பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

குண்டுரைச் சொந்த ஊராகக் கொண்ட அந்த மாணவி ஐதராபாத்தில் விடுதியில் தங்கி நர்சிங் படித்து வந்துள்ளார். அவர் தனது தந்தையின் கணக்கில் இருந்து சிறிது சிறிதாக இரண்டு லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்து செலவு செய்துள்ளார். தனது தந்தை கண்டுபிடிக்கும் முன்பு அந்த பணத்தை திருப்பி கட்ட எண்ணிய அந்த மாணவி, அதற்காக தனது ஒரு சிறுநீரகத்தை விற்கும் முடிவு செய்துள்ளார். அதன்படி இணையத்தில்தான் சிறுநீரகத்தை விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, அந்த மாணவியை பிரவீன் ராஜ் என்ற நபர் தொடர்பு கொண்டுள்ளார். மாணவியின் சிறுநீரகத்தை 3 கோடி ரூபாய்க்கு தான் விற்பனை செய்து தருவதாக கூறியுள்ளார்.

மாணவி நம்ப வேண்டும் என்பதற்காக சென்னையில் இருக்கும் ஒரு சிட்டி வங்கி கணக்கிற்கு 3 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணத்தைக் காட்டி, அறுவைசிகிச்சைக்கு முன்பு பாதிப் பணமும், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பிறகு மீதிப் பணத்தை தருவதாகவும் கூறியிருக்கிறார் பிரவீன் ராஜ். இதை நம்பிய மாணவயிடம் ஒன்றரைக் கோடி முன்பணம் தர வேண்டும் என்றால் வெரிஃபிகேசன் சார்ஜாக பதினாறு லட்சம் ரூபாய் தர வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்.

மாணவியும் நம்பி தனது தந்தையின் வங்கி கணக்கில் இருந்து பதினாறு லட்சம் ரூபாயை எடுத்து பிரவீன் ராஜூக்கு கொடுத்துள்ளார். ஆனால் அதன்பிறகு பாதிப்பணமும் வரவில்லை. அறுவை சிகிச்சையும் நடைபெறவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து தான் கொடுத்த பதினாறு லட்சம் ரூபாயை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு பிரவீன் ராஜ் டெல்லியில் ஒரு முகவரியைக் கொடுத்து, அங்கு சென்று பணம் பெற்றுக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார். மாணவி டெல்லி சென்று பார்த்த போது அந்த முகவரி போலியானது எனத் தெரியவந்தது.  இதையடுத்து தான் ஏமாற்றப்பட்தை அறிந்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

தனது வங்கி கணக்கில் இருந்து பதினாறு லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதை அறிந்து தனது மகளிடம் கேட்டுள்ளார் தந்தை. அப்போது மகள் மர்ம நபரிடம் பணம் கொடுத்து ஏமாந்து போனது பற்றி அறிந்து, மாணவியை குண்டூருக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் பயத்தில் மாணவி ஐதராபத்தில் இருக்கும் விடுதியில் இருந்து தலைமறைவாகி விட்டார்.

இந்த சம்வபம் குறித்து தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வந்தனர். அப்போது மாணவி ஜக்கையபேட்டையில் உள்ள தனது தோழியின் வீட்டில் இருப்பதை அறிந்து மாணவியை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும் பணத்தை மோசடி செய்த நபர்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
news18


 


Post a Comment

0 Comments