Ticker

6/recent/ticker-posts

Ad Code

இலங்கை மக்களை மீண்டும் ஒரு போராட்டத்திற்கு இழுக்கின்ற அரசாங்கம்

இலங்கையின் நிலைம நாளுக்கு நாள் மிகவும் மோசமான நிலைக்குச் செல்கின்றது.நாட்டு மக்களை மீண்டும் ஒரு போராட்டத்தை நோக்கி இழுத்துச் செல்கின்றது இந்த அரசு.

நாட்டின் விலைவாசி அதிகரிப்பு அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளது. இதில் பாடசாலை மாணவர்கள் மாத்திரம் விதிவிளக்கல்ல எனும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கையையும் இந்த பொருளாதார நெருக்கடி கேள்வி குறியாகியுள்ளது.

நாட்டில் பொருட்களின் விலைவாசிகள் கூடுகின்றதே தவிர குறைப்பதற்கான நடவடிக்கைகள் இல்லை என பாடசாலை பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொருட்களின் விலை அதிகரிப்பட்டால் பிள்ளைகளை தொடர்ந்து பாடசாலைக்கு அனுப்புவது கேள்வி குறியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த விலைவாசி அதிகரிப்பிற்கு அரசாங்கமே காரணம். நாட்டு வளங்களை சுரண்டுபவர்கள் சுரண்டிக்கொண்டே போவார்கள். இல்லாதவர்கள் இல்லாமலே போவார்கள். இதை யாரும் கேட்க போவதும் இல்லை மக்கள் பணத்தை எடுத்தவர்களிடமிருந்து யாரும் திருப்பி வாங்குவதும் இல்லை என ஒரு தயார் தெரிவித்துள்ளார்.

இப்படியாக இலங்கையின் நிலைமை இருக்கின்றது .

இப்படியான ஒரு நிலைமை தொடரும் பட்சத்தில் எதிகால சமுதாயம் படிப்பறிவில்லாத நிலைக்கு தள்ளப்படும்.

இந்நிலையில் மாணவர்கள் போதை மருந்து பாவனையில் ஆர்வம் காட்டி வருகின்றதை காணக்கூடியதாயிருக்கின்றது.

தினமும் போதை கடத்தல் .போதை மருந்து பாவனை என்ற செய்திகள் பெற்றோர்களை அச்சம் கொள்ள வைக்கின்றது.

அரசியல்வாதிகளாளும் ,குண்டர்களாலும் பாவிக்கப்பட்டு வந்த போதை மருந்து பாவனை இன்று பாடசாலைகளிலும் பாவிக்கப்படுகின்றது.இது நாட்டுக்கு ஆரோக்கிய செய்தியல்ல .

அரசாங்கம் இதற்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால் எதிகாலத்தில் மிகவு பாரதூரமான விளைவுகளை நாம் சந்திக்கவேண்டி வரும் 

ஆகவே இலங்கை மக்கள் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு தயாராகவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது .

கல்ஹின்னை மாஸ்டர் 


 


Post a Comment

0 Comments