சீரியல் கில்லரை மையமாக வைத்து எடுக்கப்பட்டு பட்டையைக் கிளப்பிய படம் ராட்சசன். அப்படியான லுக்கில் உண்மையாகவே ஒரு சீரியல் கில்லர் இருக்கிறார். அவர்தான் சார்லஸ் சோப்ராஜ்.
உலகையோ உலுக்கிய படுகொலைகளை செய்த சர்வதேச கிரிமினல் சார்லஸ் சோப்ராஜ் நேபாள சிறையில் இருந்து விடுதலை ஆகிறான். 1970இல் இருந்து 1980 காலகட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கொடூர கொலைகளை சேர்ந்த சர்வதேச கொலைகாரன் சார்லஸ் சோப்ராஜ். 78 வயதான சார்லஸ் சோப்ராஜ் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவன். ஆரம்ப காலத்தில் பிரான்ஸ் நாட்டில் சின்ன சின்ன குற்றங்களை செய்து சிறை தண்டனை அனுபவித்த சார்லஸ், 1970 காலத்தில் தாய்லாந்து நாட்டில் உள்ள பட்டாயா பீச்சில் 6 பெண் சுற்றுலா பயணிகளுக்கு போதைப் பொருள் கொடுத்து கொலை செய்துள்ளார். அப்போது தான் தாய்லாந்து அரசு சார்லஸ்சுக்கு கைது வாரன்ட் பிறப்பித்தது.
இதை தொடர்ந்து தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம் போன்ற நாடுகளில் தொடர்ச்சியாக கொலை குற்றங்களை செய்து தப்பியோடியுள்ளார் சார்லஸ். நேபாளத்தில் அமெரிக்கா மற்றும் கனடா நாட்டை சேர்ந்த பெண்களை கொலை செய்து தப்பியோடியுள்ளார். இந்தியாவிலும் பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விஷம் வைத்து சதித்திட்டம் தீட்டிய குற்றத்திற்காக சார்லஸ் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு பல நாடுகளில் கிரிமினல் குற்றங்களை செய்து சர்வதேச கிரிமினலாக திரிந்த சார்லஸை இந்திய காவல்துறை 1980களில் இறுதியில் கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் சிறையில் இருந்த சார்லஸ் 1996இல் பல திட்டம் தீட்டி சிறையில் இருந்து தப்பியோடியுள்ளார். பின்னர் கோவாவில் கைது செய்யப்பட்ட சில ஆண்டுகளில் விடுதலை ஆனார். ஆனால், நேபாள காவல்துறை 2003ஆம் ஆண்டில் சார்லஸை ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. நேபாள நீதிமன்றம் சார்லஸ்சுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.
சுமார் 20 ஆண்டுகள் சிறைவாசம் செய்த சார்லஸ், தனது உடல்நலனை காரணம் காட்டி முன்கூட்டியே தன்னை விடுதலை செய்ய வேண்டும் என தொடர் கருணை மனுக்களை அளித்து வந்தார் சார்லஸ். இந்நிலையில் 78 வயதான சார்லஸ்சின் கோரிக்கையை ஏற்றும் நேபாள அரசு விடுதலை செய்கிறது. பிகினி உடை அணிந்த பெண்களை குறிவைத்து கொலை செய்ததால் The Bikini killer என்றும் சாமார்த்தியமாக பலே திட்டங்களை தீட்டி காவல்துறை பிடியில் இருந்து பாம்பு போல தப்பி செல்லும் திறன் கொண்டதால் The serpent என்ற பட்டப்பெயர்கள் இந்த சர்வதேச கிரிமினில் சார்லஸ் சோப்ராஜுக்கு உள்ளது.
இவர் குறித்து பிபிசி, நெட்பிளிக்ஸ் ஆகியவை டாக்குமென்டரி தொடர்களை வெளியிட்டுள்ளன. சிறையில் இருக்கும் போதே சார்லஸ் தனது நேபாள நாட்டு வழக்கறிஞரின் மகள் நிஹிதா பிஸ்வாஸை 2008ஆம் ஆண்டில் திருமணம் செய்துள்ளார். நிஹிதா பிஸ்வாஸ் சார்லஸை விட 44 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments