Ticker

6/recent/ticker-posts

நலம் வாழ -மருத்துவப் பகுதி-7

அன்பிற்கினிய வேட்டை வாசகர்களே சென்ற வாரம் சக்தி தரும் உணவுகள் என்ற தொடரை பார்த்தோம். நாம் உண்ணக்கூடிய உணவு செரித்து நமக்கு சக்தியை அளிக்க வேண்டும், மாறாக இன்றோ சாப்பிட்ட உடன் பல உபாதைகள் தோன்றுகிறது. என்னிடம் வரும் பயனாளிகள் கூறுவது என்னவென்றால் சாப்பிடாமல் இருந்தால் நன்றாக இருக்கிறது. சாப்பிட்டவுடன் ஏனோ தூக்கம் வருகிறது என்றும், சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது என்றும், சாப்பிட்டவுடன் அஜீரண கோளாறு ஏற்படுகிறது என்றும், கூறுகின்றனர்

இதற்குக் காரணம் அவர்களின் உடலில் உள்ள செரிமான கோளாறு தான். 
மனித உடல் இயந்திரத்திற்கு ஒப்பானது எனவே அற்றால் அளவரிந்து உண்ணும் போது உங்களது உடல் அபரிமிதமான சக்தியை வெளிப்படுத்துகிறது.

 சரி அந்த அளவு என்ன என்று பார்க்கலாம் .

 சராசரியாக ஒவ்வொருவரும் தனித்துவமான தன்மைகள் கொண்டவர்கள் ஏனெனில் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் குறிப்பாக மனிதர்களின் இயக்கங்கள் வெவ்வாறானவை. அதற்கு ஏற்றவாறு அவர்களின் நுகர்வுத் திறனும் வெவ்வேறானவை. அதன் படி நாம் வேலைகளை பிரிக்கலாம் அவர்கள் அவர்களின் வேலைக்கு ஏற்றவாறு அவர்களின் நுகர்வுத் திறனும் மாறுபடும். 

முதலில் 
1.எளிதான  வேலை.
2.நடுத்தர வேலை
3.கடினமான வேலை 

இதில் எளிதான வேலை  செய்பவர்களுக்கு அதாவது அலுவலக வேலை, மருத்துவர் ,ஆசிரியர் ,வக்கீல் போன்றவர்களுக்கு ஒரு மணி நேரம் வேலை செய்யும் பொழுது ஆண்களுக்கு 140 கி.கலோரி பெண்களுக்கு 120 கி.கலோரியும்.    

நடுத்தர வேலை செய்பவர்களுக்கு அதாவது தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள், தோட்ட தொழிலாளர்கள், ராணுவ வீரர்கள், மீனவர்கள் ,கடை வியாபாரிகள் போன்றவர்கள் ஒரு மணி நேரம் வேலை செய்வதற்கு ஆண்கள் எனில் 175 கிலோ கலோரி சக்தியும் பெண்களுக்கு 125 கி. கலோரி சக்தியும்.

கடினமான வேலை செய்பவர்களுக்கு அதாவது விவசாயம், காட்டு இலாக்காவில் பணிபுரிபவர்கள் விளையாட்டு வீரர்கள், இரும்பு தொழில் செய்பவர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் ,
மேலும் கடின வேலை செய்பவர்களுக்கு குறைந்தது ஒரு மணி நேரம் வேலை செய்ய 240 கிலோ கலோரிகளும் பெண்களுக்கு 225 கிலோ கலோரிகளும் தேவைப்படுகிறது.    

வேலைகளை பொருத்து மட்டும் அல்லாமல் ஒருவனின் உடல் அமைப்பு உடலின் பரப்பு வயது தட்பவெப்ப நிலை ஆகியவற்றின் அடிப்படையிலும் சக்தியின் தேவை மாறுபடுகிறது இப்பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் சக்தியின் அளவை பார்த்தோம். இந்த சக்தியானது சில காரணங்களினால் முழுமையாக கிடைக்காமல் போகின்றது 

இவற்றை பாதிக்கும் காரணிகள் பல உள்ளன
மேலும் அவர்களுக்கு சரியான அளவு எனர்ஜி கிடைக்காமல் போவதற்கு உடலின் அளவு உடலின் கட்டு, உடலின் வயது, பாலினம் ,உண்ணும் உணவு, தட்பவெப்ப நிலை ,ஆரோக்கிய நிலை இவை அனைத்தும் நமது நாம் உண்ணும் உணவுப் பொருள்களின் சக்தியினை சரியாக கிரகிக்க தேவைப்படும். ஆற்றல் நமக்கு சரியாக கிடைக்க உண்ணும் உணவை சரியாக தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். 

நாம் தேர்ந்தெடுத்து சாப்பிட்டும் கூட   சரியாக நமக்கு ஆற்றல் கிடைக்காமல் போகும்பொழுது தான் பலகுறை நோய்கள் நமக்கு ஏற்படுகிறது .இவற்றை பாதிக்கும் காரணிகள் என்ன என்று அடுத்த தொடரில் நாம் பார்க்கலாம் அன்பிற்கினிய வாசகர்களே.....    

நலம் வாழ.....
தொடரில் அடுத்த வாரம் சந்திக்கலாம்......நலம் வாழ என்றும் ........
டாக்டர் ஃபர்ஜானா பாத்திமா M.D(Acu).


தொகுப்பு :
உங்கள் குறள் யோகி, 
தமிழ்ச் செம்மல், 
டாக்டர் மு.க.அன்வர் பாட்சா.


 


Post a Comment

0 Comments