இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி தாக்காவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான் (7) மற்றும் ரோஹித் சர்மா (27) ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். விராட் கோலி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் (24), வாஷிங்டன் சுந்தர்(19), ஷபாஸ் அகமது(0), ஷர்துல் தாகூர்(2), தீபக் சாஹர்(0) ஆகியோர் ஒருமுனையில் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 73 ரன்களுக்கு 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்திய அணி 41.2 ஓவரில் வெறும் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியாவுக்கு வரமாட்டோம்னு அடம்பிடித்த பாக்.,கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா! வெளுத்துவாங்கிய முன்னாள்வீரர்
187 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய வங்கதேச அணி, 136 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு மெஹிடி ஹசனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து முஸ்தாஃபிசுர் ரஹ்மான் விக்கெட்டை இழந்துவிடாமல் ஆட, மெஹிடி ஹசன் அபாரமாக பேட்டிங் ஆடி 38 ரன்களை விளாசி வங்கதேச அணியை வெற்றி பெற செய்தார். கடைசி விக்கெட்டுக்கு மெஹிடி ஹசனும் முஸ்தாஃபிசுர் ரஹ்மானும் இணைந்து 51 ரன்கள் அடித்து வங்கதேசத்தை வெற்றி பெற செய்தனர். ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது வங்கதேச அணி.
இந்த போட்டியில் கடைசி விக்கெட்டுக்கு 51 ரன்களை குவித்தது மெஹிடி ஹசன் - முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஜோடி. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசி விக்கெட்டுக்கு வங்கதேச அணியின் 2வதுஅதிகபட்ச ஸ்கோர் இதுதான். மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான ரன் சேஸிங்கில், 10வது விக்கெட்டுக்கு அடிக்கப்பட்ட 4வது அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
asianetnews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments