Ticker

6/recent/ticker-posts

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன சுட்டிக்குழந்தை சாம் கரன்

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஐபிஎல் ஏலம் கொச்சியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஏலத்தில் 405 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர் இதில், 273 இந்திய வீரர்களும், 132 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.405 வீரர்களில் இருந்து 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 87 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதால் இந்த ஏலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

ஏலம் தொடங்கியதும் முதல் வீரராக ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டனான வில்லியம்சன் அறிவிக்கப்பட்டார். இவருக்கு ரூ. 2 கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அவரை வாங்க அணிகள் அதிகம் ஆர்வம் காட்டவிலை. அவரை கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

அடுத்த வீரராக இங்கிலாந்து அணியின் ஹாரி பரூக்கை ஏலத்தில் எடுக்க போட்டி நிலவியது. ஹாரியை ஏலத்தில் எடுக்க ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் போட்டியிட்டன. இறுதியில் ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஹேரியை ஏலத்தில் எடுத்தது.

டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்று இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்த சாம் கரனுக்கு அனைவரும் எதர்பார்த்தது போல போட்டிகள் அதிகமாக இருந்தது. முதலில் மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகள் போட்டியிட்டன. ஏலம் 14 கோடிக்கு மேல் சென்றதும் சிஎஸ்கே விலகியது. பின் பஞ்சாப் அணியும் மும்பையும் போட்டியின. இறுதியாக சாம் கரனை பஞ்சாப் அணி ரூ.18.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை சாம் கரன் படைத்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள்
ரூ. 18.5 கோடி - சாம் கரன் (பஞ்சாப் கிங்ஸ்)
ரூ.16.2 கோடி - கிறிஸ் மோரிஸ் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
ரூ.16 கோடி - யுவராஜ் சிங் (டெல்லி கேப்பிட்டள்ஸ்)
ரூ.15.5 கோடி - பேட் கம்மின்ஸ் (கொல்கத்தா)
ரூ.15.25 கோடி - இஷான் கிஷான் (மும்பை)

சாம் கரனை போன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது. பென் ஸ்டோக்ஸை சிஎஸ்கே ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ரஹோனேவை அடிப்படை ஏலம் விலையான ரூ.50 லட்சத்திற்கு சிஎஸ்கே எடுத்துள்ளது.
news18


 


Post a Comment

0 Comments