Ticker

6/recent/ticker-posts

மஜ்மா நகர் கோவிட் மையவாடிக்கு யானை பாதுகாப்பு வேலி ஆரம்பித்து வைக்கப்பட்டது.


ஓட்டமாவடி கோரளைப்பற்று பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள மஜ்மா நகர் சூடுபத்தியசேனை கொவிட் ஜனாஸா மையவாடிக்கான யானைத் தடுப்பு சுற்று வேலி வேலைகள் தேசிய முஸ்லிம் சபையின் (NMA) அனுசரணையுடன் கோவிட் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் தேசியத் தலைவரும் பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அல்ஹாஜ் அfப்ஸல் மரிக்கார் அவர்களினால் 2022.12.04 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இதன் இரண்டாம் கட்டமாக பாதுகாப்பு மதிலும், மூன்றாம் கட்டமாக வெளி இடங்களிலிருந்து ஜியாரத் செய்ய வருவோருக்கான அடிப்படை வசதி மண்டபத்தையும் நிர்மாணிப்பதற்கான முடிவும் எடுக்கப்பட்டது.  

அதேவேளை கோவிட் ஜனாஸா மரணங்கள் சம்பந்தமான வரலாற்றுப் பதிவொன்றை எதிர்கால சந்ததிகளின் தெளிவிற்காக புத்தகவடிவில் கொண்டுவருவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.  

இந்த நிகழ்வில் கோரளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் கெளரவ நெளபர்,  செயலாளர் சிஹாப்தீன், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், மத்திய மாகாண கோவிட் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் சித்தீக் (கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர்), உப தலைவர்  சfப்பான் - உடுநுவர பிரதேச சபை உப தவிசாளர், செயலாளர் ஹிதாயத் சத்தார் - முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர், இணைச் செயலாளர் நளீர், பொருளாளர் ரூமி இவர்களுடன் மர்ஹூம் M H M அஷ்ரப் அவர்களின் புதல்வர் அமான் அஸ்ரப் அவர்களும் கலந்துகொண்டார்.
 


 


Post a Comment

0 Comments