
கத்தார் 2022 உலகக்கிண்ணக் காற்பந்துத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காலிறுதிப்போட்டிகள் நிறைவடைந்து பிரான்ஸ், ஆர்ஜெண்டினா, மொராக்கோ, குரோஷியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இதுவரை நடந்து முடிந்துள்ள உலகக்கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்து, ரசிகர்களுக்குப் பெருவிருந்து படைத்து வந்தன.
இனிமேல் நிகழப்போகின்றவைகள், மேலும் பரபரப்புக்களை ஏற்படுத்தி, காற்பந்தாட்ட வரலாற்றில் அதிர்வலைகளைத் தரப்போகின்றன!

நடந்து முடிந்த இரண்டு காலிறுதி ஆட்டங்கள் அதிகப்படி நேரத்தைத்தாண்டி, பெனால்டி வாய்ப்புவரை சென்றன. இதுவே நெதர்லாந்து அணிக்கெதிரான காலிறுதி ஆட்டத்தில் 1978, 1986ம் ஆண்டைய மரோடோனா அணிச் சாம்பியனான ஆர்ஜென்டினாவிற்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்ததெனலாம்!
உலகின் முன்னணி ஆட்டக்காரராக இருந்தபோதிலும், 35 வயதாகிவிட்ட லயனல் மெஸ்ஸி, தான் பங்கேற்கும் கடைசி உலகக்கிண்ணப் போட்டியாக அமையப்போகும் இத்தொடரில், வெற்றிக்கிண்ணத்தைத் தனது தலைமைத்துவக் காலத்தில் எட்டிவிடவேண்டும் என்பதையும், இம்முறைக்கான தங்கக்காலணியைத் தன் வசப்படுத்திவிட வேண்டும் என்பதையுமே தனது எதிர்பார்ப்பாகக் கொண்டுள்ளார்!
இந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் Golden Boot விருதைக் கைக்கெட்டிய தூரத்தில் வைத்திருக்கும் வீரராகத் தற்போதுவரை, பிரான்ஸைச் சேர்ந்த கிலியன் எம்பாப்பே காணப்படுகின்றார்.
இவர் 5 கோல்களை அடித்து முன்னிலை வகிக்கும் நிலையில், ஆர்ஜென்ட்டினாவின் லயனல் மெஸ்ஸியும், பிரான்ஸின் ஜீரூத்தும் தலா நான்கு கோல்களை அடித்து, அடுத்த படியில் நிற்கின்றனர்.
இம்மூன்று அணிகளும் அரையிறுதியியில் ஆட இருப்பதால், தங்கக்காலணி இவர்களுள் யாருக்காவதுதான் போய்ச்சேரும்!

பிறகு நெதர்லாந்து ஆட்டக்காரர் மெம்ஃபிஸ் டிப்பாய்க்குப் பதிலாகக் களமிறங்கிய வெஹோஸ்ட் 83வது நிமிடத்தில் பந்தைத் தலையால் வலைக்குள்தள்ளி, முதல் கோலை அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டபோதுதான் மெஸ்ஸி அதிர்ந்துபோய் விட்டார்!
அதன்பின்னர், இடைநிறுத்தத்திற்கான அதிகப்படி நேரத்தின், 11வது நிமிடத்தில் மீண்டும் வெஹோஸ்ட் மறுபடி கோலடித்து, ஆட்டத்தைச் சமப்படுத்தியபோது, ஆர்ஜென்டினா வீரர்களும், ரசிகர்களும் மேலும் அதிர்ச்சியில் உரைந்துபோய் விட்டனர்!
அதன்பின், வழங்கப்பட்ட அதிகப்படி அரைமணி நேரத்தின்போது இருதரப்புமே கோல் அடிக்காததால் வெற்றியாளரை முடிவுசெய்ய, "பெனால்டி வாய்ப்பு முறை" கையாளப்பட்டமையே மெஸ்ஸியின் எதிர்பார்ப்பிற்கு மறுபடி களமமைத்துக் கொடுத்ததெனலாம்!
இதன்போதுதான், 4:3 என்ற கணக்கில் ஆர்ஜென்டினா முன்னிலைக்கு வந்து, தனது அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்து கொண்டது!
- செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments