Ticker

6/recent/ticker-posts

நலம் வாழ -மருத்துவப் பகுதி -12

நலம் வாழ என்று தொடரின் மூலமாக நாம் எவ்வாறு ஆரோக்கியமாக வாழ்வது என்பதை குறித்தும் நமது உணவுகளைப் பற்றிய உண்மைகளையும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றியும் அவற்றின் நன்மை தீமைகளை குறித்தும் நாம் பார்த்து வருகிறோம்.
 
சென்ற வாரத் தொடரில் கால்சியம் என்று தாது உப்பின் உபயோகம் குறித்தும் எந்தெந்த பொருட்களில் கால்சியம் உள்ளது என்பதை பற்றியும் பார்த்தோம். 
     
இந்த வாரத்தில் கால்சியத்தை குறித்து இன்னும் பல உபயோகரமான செய்திகளை பார்க்கலாம்.
    
ஏனெனில் கால்சியம் நமது உடலில் மிக முக்கிய பங்காற்றி வருகின்றது மிக முக்கியமாக இதய தசைகளை சுருங்கி விரிய வைப்பதில் கால்சியம் மிக முக்கியமான ஒரு பொருளாக விளங்குகிறது.

கால்சியத்தின் தேவை
19 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு கால்சியம் பரிந்துரைக்கப்பட்ட அளவு 1000 மில்லி கிராம் 51 மேலுள்ள பெண்களுக்கு 1200 மில்லி கிராம் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு 1500 மில்லி கிராம் 
19 முதல் 70 வயது வரை உள்ள ஆண்களுக்கு 1200 மில்லி கிராம் கால்சியம் தேவைப்படுகிறது.

கால்சியத்தின் குறைபாடு
ரத்தத்தில் கால்ஷியம் குறையும் பொழுது தசைப்பிடிப்பு அல்லது பலவீனமாக உணர்வது  விரல்களில் உணர்வு இல்லாமல் போவது அல்லது அதிகமான கூச்ச உணர்வு  அசாதாரணமான இதயத்துடிப்பு 
 இவை முக்கியமான அறிகுறிகளாக  நமக்கு தோன்றும்.
   
கால்சியம் நமது உடலில் எவ்வாறு உறிஞ்சப்படுகிறது.
கால்சியம் மற்றும் தாது உப்புகளைப் போன்று நமது குடலில் விரைவாக செரிக்க கூடிய ஒரு பொருள் அல்ல. இது ஒரு மிகப்பெரிய ஒரு தாது உப்பு
மேலும் நமது குடலினால் உறிஞ்சப்படக்கூடிய அளவு என்பது கால்சியத்தை பொறுத்தவரையில் (கால்சியம் உயிர் கிடைக்கும் தன்மை )"அதாவது" கால்சியம் பயோ அவைலபிலிட்டி "calcium bioavailability என்று குறிப்பிடப்படுகிறது.

உதாரணமாக பால் உணவுகள் சுமார் 30 சதவீதம் உறிஞ்சுதலில் உயிர் கிடைக்கும் தன்மையை கொண்டுள்ளது எனவே பாலில் உள்ள 300 மில்லி கிராம் கால்சியம் வெறும் 100 மில்லி கிராம் மட்டுமே உடலால் உறிஞ்சப்பட்டு பயன்படுத்தப்படும்.

ஆனால் கீரைகளில் உள்ள கால்சியம் 50 சதவீதம் அளவு நமது உடலால் உறிஞ்சப்படுகிறது.இதனால் நமது உடலில் உறிஞ்சப்படும் திறனை மட்டுமே அதிகரிக்க வேண்டுமே தவிர கால்சியத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நமது ரத்தத்தில் கால்சியம் இறுக்கமாக கட்டுப்படுத்தப்படுகிறது.
 
எனவே நாம் செரிமான திறனை கண்காணித்து சரி செய்ய வேண்டுமே தவிர கால்சியம் பற்றாக்குறையை சப்ளிமெண்ட்ஸ்களை கொண்டு சரி செய்ய முயல்வதை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் கால்சியம் ரத்தத்தில் அதிகமாக இருந்தால் ஹைபர்கால்சீமியா என்று அழைக்கப்படும் .கால்சியத்தின் யு எல் சப்ளிமெண்ட் இன் அளவில்
 இருந்து தினமும் 2500 மில்லி கிராம் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 2000 மில்லி கிராமுக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது 
 
குறிப்பாக சப்ளிமெண்ட்ஸ் இருந்து எடுக்கும் பொழுது இது சிறுநீரக கற்கள் ,ப்ராஸ்டேட் புற்றுநோய், மற்றும் மலச்சிக்கல், போன்ற சில நிலைமைகளில் அபாயத்தை அதிகரிக்கும்.

 சில சில ஆய்வுகளில் கால்சியம் நீண்ட கால அளவு அதிக அளவு எடுக்கும் பொழுது ரத்த நாளங்களில் குவிந்து இருதய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
 
கால்சியம் மிகப்பெரிய ஒரு கனிமம் ஆகும் இது இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற பிற தாதுக்கள்  உறிஞ்சுவதை தடுக்கிறது. வெளியில் இருந்து எடுக்கப்படும்   ஊட்டச்சத்துக்கள்  மற்றும் மருந்துகள் உங்கள் கால்சியத்தின் தேவையை அதிகரிக்கலாம். 

ஏனெனில் அவை குடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதை குறைக்கும் பொழுது அல்லது சிறுநீரகத்தில் அதிக அளவு கால்சியத்தை வெளியேற்றப்படும் பொழுது  சிறுநீரக செயல்திறன் குறைவு ஏற்படுகிறது.  மேலும் அடுத்த வாரம் இந்த கால்சியத்தின் செயல்களைப் பற்றி விரிவாக காணலாம்.

என்றும் வேட்டை வாசகர்களுக்காக
உங்களுடன்
டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).

தொகுப்பு :
உங்கள் குறள் யோகி, 
தமிழ்ச் செம்மல், 
டாக்டர் மு.க.அன்வர் பாட்சா.


 


Post a Comment

0 Comments