Ticker

6/recent/ticker-posts

Ad Code



நலம் வாழ -மருத்துவப் பகுதி -9

நலம் வாழ என்ற தொடரின் மூலமாக ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவு எவ்வாறு உண்பது என்பது முதல் நமது வாழ்க்கை முறையை எவ்வாறு சீரமைப்பது என்பது வரை ஒவ்வொரு தொடரிலும் பார்த்து வருகின்றோம்.

ஆரம்பத் தொடர்களில் உடல் நலம் என்பது நமது உடலில் உள்ள உள் உறுப்புகளின் சீரான செயல்பாடுகளைக் கொண்டதுதான் என்பதை
நாம் பார்த்தோம்.

நான் நம் உடலில் ஏற்படும் வலிகள் உடல் சோர்வு, தூக்கமின்மை ,அதீத உடல் வளர்ச்சி, அல்லது உடல் வளர்ச்சி இன்மை, தோல்களில் ஏற்படும் வறட்சி, உப்பிய வயிறு தலைமுடி கொட்டுதல் இன்னும் பல அறிகுறிகளை நாம் உடல் உபாதை  என்று  அதற்கு தீர்வு காண முயல்கிறோம்.

ஆனால் இவையெல்லாம் உடல் உபாதையா, இல்லையா ?என்றால் இல்லை .....
ஆம் .. இவை நமது அக உறுப்புகளின்   முறையற்ற  செயல்பாடுகளின்  வெளிப்பாடு என்பதை நாம் கவனிக்க தவறி விட்டோம் ..
சரி இவற்றை எவ்வாறு களைவது என்பது கேட்பது புரிகிறது ...

நமது உடலில் பெரும் பங்காற்றக்கூடிய உடலின் உள் உறுப்புகளான  உறுப்புகளான இருதயம், நுரையீரல் ,இரைப்பை, கல்லீரல் ,பித்தப்பை, மண்ணீரல், பெருங்குடல் ,சிறுகுடல் ,சிறுநீரகம், சிறுநீர்ப்பை, கர்பப்பை போன்றவையும் இதனுடன் நரம்பு மண்டலம் ,ரத்த ஓட்ட மண்டலம், சிறுநீரக மண்டலம், நிணநீர் மண்டலம் ,இனப்பெருக்க மண்டலம், சுவாச மண்டலம், நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம், கழிவு நீக்க மண்டலம் என பல மண்டலங்கள் ஒன்று கூடியது தான் நமது உடல். இவை அனைத்தும் ஒழுங்காக செயல்படவும் இவற்றின் செயல்பாடுகளை ஒழுங்காக செயல்படுத்த மூளை இருதயம் என ராஜ கருவிகளும் அப்பப்பா......... இன்னும் .....இன்னும்... என சொல்லிக்கொண்டே போகலாம். 

ஏனெனில் உடல் என்பது ஒரு இயந்திரம்.இவை பல்வேறு வகையான செயல்பாடுகளை கொண்டது ஒவ்வொன்றின் செயல்பாடுகளும் தனித்துவமானவை. இவை இறைவனின் படைப்பில் பல அற்புதங்களை காணலாம்.

நாம் உண்ணும் உணவு வாயில் செல்வது துவங்கி வெளியேறும் வரை பல வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றது.

கண் பார்த்து செயல்படுத்துவதும், நம் மனது நினைப்பதை வாயால் மொழிவதும், இன்னும் பல.. பல....

பல்வேறு பல்வேறு பணிகளை உடல் ஒவ்வொரு நாளும் செய்து கொண்டே தான் இருக்கிறது இவ்வளவு வேலைகளை செய்யும் உடலுக்குத் தேவையான ஆற்றல் எனர்ஜி எங்கிருந்து கிடைக்கும்?                   

நமது உணவில் இருந்தும் சுவாசிக்கும் காற்றின் மூலமாகவும் குடிக்கும் நீரில் இருந்தும் சூரிய ஒளியின் மூலமாகவும் தான்.

சரி இதில் எது முதல் தேவை என்பதை பார்ப்போம்.  அனைத்தும் சரியாக இயங்கும் பொழுது தான் உடலின் எல்லா இயக்கங்களும் சரியாக நடக்கும்.

எல்லா இயக்கங்களும் சரிவர நடக்க மிக முக்கியமாக பங்கு வகிக்கக்கூடியது நாளமில்லா சுரப்பிகள்.

இவற்றின் தேவை  அளவு மிகக் குறைந்த அளவு தான். ஆனால் இவற்றின் பணிகளோ கணக்கில் அடங்காதவை .....

தற்போது எங்கும் எவ்விடத்திலும் நாம் காண்பது நீரழிவு, அதாவது சர்க்கரை, தைராய்டு, குழந்தையின்மை கேன்சர் போன்றவை அங்கின்கெடாதபடி எல்லோருக்கும் வர காரணங்கள் பல இருந்தாலும் முதற்காரணம் நமது உடலின் ராஜ கருவிகளின் முறையற்ற செயல்பாடுகள் தான்.

இவற்றின் செயல்பாடுகள் ஏன் குறைகின்றன என்றும் செயல்பாடுகளை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்றும் இவற்றின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் எவை?

உதாரணமாக நமது உடலுக்கு 17 தாது உப்புக்கள் தேவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தாது உப்புக்கள் உடலுக்கு தேவையான அளவை பொருத்தும், அவை செய்யும் வேலையை பொருத்தும் macro elements (பெரிய ஆதாரப்பொருட்கள்) micro elements(நுண்ணிய ஆதாரப்பொருட்கள் என்று இரண்டு வகைப்படுத்தலாம். நமது உடலில் சுண்ணாம்புச்சத்து பாஸ்பரஸ் பொட்டாசியம் கந்தகம் சோடியம் குளோரைடு மக்னீசியம் இரும்புச்சத்து துத்தநாகம் யுரேனியம் மெக்னீசியம், யுரேனியம் மாலிப்டினம் கோபால்ட் குரோமியம் ஃபுளோரிங் போன்ற பல தாதுக்கள் இருக்கின்றது தாது உப்புக்கள் உடலின் உள்ளும் உணவிலும் அங்ககப் பொருட்களாக அதாவது( organic and inorganic constituents) காணப்படுகின்றன உடலின் மொத்த எடையில் நான்கு சதவீதம் மட்டுமே தாது உப்புக்களால் ஆனது.

ஆனால் இவற்றின் பணிகள் மிக அபாரமானவை.இவற்றின் பணிகளை அடுத்த வாரம் அடுத்த தொடரில் காணலாம்.

வேட்டை வாசகர்களே ...!
 உங்களுக்காக என்றும்.... தகவல்களுடன்.....
 டாக்டர் ஃபர்ஜானா பாத்திமா M.D(Acu).

தொகுப்பு :
உங்கள் குறள் யோகி, 
தமிழ்ச் செம்மல், 
டாக்டர் மு.க.அன்வர் பாட்சா.


 


Post a Comment

0 Comments