Ticker

6/recent/ticker-posts

Ad Code


 

யூடியூப் மூலம் சம்பாதித்து ஆடி கார் வாங்கிய இளைஞர்


பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஹர்ஷ் ராஜ்புட். இவர் தனது யூடியூப் சேனலில் பல்வேறு விஷயங்களைப் பற்றி நகைச்சுவையான வீடியோக்களைத் தயாரித்து வழங்கிவருகிறார். எல்லா வீடியோவும் சுமார் பத்து நிமிடங்கள்தான் உள்ளன

இவரது வீடியோவை ரசித்துப் பார்க்க 33 லட்சம் பேர் இவரது சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து உறுப்பினர்களாக உள்ளனர். இவரது மிகப் பிரபலமான வீடியோ ஒன்றை 2 கோடி பேர் பார்த்துள்ளனர்.

ஹர்ஷ் ராஜ்புட் அவுரங்காபாத்தில் உள்ள ஜாசோயா என்ற கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது மும்பையில் வசிக்கிறார். இவரது அப்பா பீகார் காவல்துறையில் டிரைவராகப் பணியாற்றியவர்.

ராஜ்புட் பதிவிடும் பத்து நிமிட யூடியூப் வீடியோக்கள் மூலம் அவருக்கு மாதம் தோறும் 8 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. அதுமட்டுன்றி பிராண்ட் புரோமோஷன்கள் மூலம் தனியே வருவாய் ஈட்டுகிறார். கடந்த ஜூன் 2022 முதல் அக்டோபர் 2022 வரை அவருக்கு கூகுள் விளம்பரப் பிரிவிலிருந்து கிடைத்த தொகை சராசரியாக ஒரு மாதத்துக்கு ரூ.4.5 லட்சம்.

தன்னை ஒரு நடிகராகவும் முன்வைக்கிறார் ஹர்ஷ் ராஜ்புட். மும்பைக்கு வருவதற்கு முன் டெல்லியில் நாடகங்களில் நடித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றால் வீட்டில் முடங்கி இருந்த காலத்தில்தான் யூடியூப் சேனல் தொடங்கியதாகச் சொல்கிறார்.

யூடியூப் மூலம் கிடைக்கும் வருவாயில் ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கும் ராஜ்புட் அண்மையில் 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஆடி (Audi A4) சொகுசு கார் ஒன்றை வாங்கி அதில் உலா வருகிறார்.
SOURCE;asianetnews



 


Post a Comment

0 Comments