ஒரு பெண் அதிகம் ஆண்கள் இருக்கும் இடத்தில் இருக்க முடியும். ஆனால் அதிகம் பெண்கள் இருக்கும் இடத்தில் ஒரு ஆண் இருக்க முடியாது என்று சொல்வதை நாம் கேள்விப் பட்டிருப்போம். இதைப் பீகாரில் நடந்த சம்பவம் ஒன்று உண்மை என தெளிவு படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ஷெரீப் அல்லாமா இக்பால் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் மணி சங்கர் நேற்று முன்தினம் பிரில்லியண்ட் பள்ளியில் இண்டர் மீடியட் தேர்வு எழுதச் சென்றுள்ளார். அப்போது 500 மாணவிகள் மத்தியில் தேர்வு எழுத மணி சங்கர் அமர வைக்கப்பட்டுள்ளார்.
தேர்வறைக்குள் 500 மாணவிகள் மத்தியில் தனி மாணவராகத் தேர்வு எழுதுவோம் என்பதைச் சற்றும் எதிர்பார்க்காததால் மணி சங்கருக்கு அப்போது பதற்றம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தேர்வு எழுதி கொண்டிருக்கும் போது திடீரென மயங்கியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தேர்வறையிலிருந்த பொறுப்பாளர் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப் பிறகு மாணவர் மணி சங்கர் நலமுடன் உள்ளார்.
இது குறித்து மாணவர் மணி சங்கரின் அத்தை கூறுகையில், "தேர்வு அறையில் மாணவிகள் மட்டுமே இருந்ததைப் பார்த்து மணி சங்கர் பதற்றமடைந்து மயங்கி விழுந்துள்ளான். மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவன் நலமுடன் இருக்கிறான்" என தெரிவித்துள்ளார்.
தேர்வு அறையில் 500 மாணவிகளுக்கு மத்தியில் தேர்வு எழுதும்போது 12ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்த சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இணைய வாசிகள் பலரும் பலவிதமான கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
kalaignarseithigal
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments