Ticker

6/recent/ticker-posts

24கோடிக்கு சொத்து... 90 லட்சத்தில் சொகுசு கார்.. ‘எம்பிஏ சாய்வாலா’ டீ கடை தொடங்கிய இளைஞரின் சக்சஸ் ஸ்டோரி

'சாய்வாலா' என்ற இந்தி வார்த்தைக்கு டீக்கடைக்காரர் என்று அர்த்தம். மோடி பிரதமர் ஆன பின்பு இந்த வார்த்தை கூடுதலாக பிரபலமானது. காரணம் பிரதமர் மோடி தனது இளமை காலத்தில் டீ விற்றுக்கொண்டிருந்தாக கூற அதை சிலர் எதிர்தரப்பில் ஏளனம் செய்தனர். ஆனால் அந்த ஏளனத்தையே தனக்கு சாதகமான ஆயுதமாக மாற்றிய மோடி, ஒரு எளிய மகன் கடின உழைப்பால் முன்னேறியுள்ளேன் என பிரான்டிங் செய்துகொண்டார். அப்போது தொடங்கி இந்த சாய்வாலா என்ற வார்த்தை பிரான்டிங் வார்த்தையாகவே மாறிவிட்டது.

இந்த சாய்வாலா என்ற வார்த்தை குஜராத்தைச் சேர்ந்த மற்றொரு இளைஞர் ஒருவருக்கும் பயன்பட்டு தற்போது நாட்டின் முன்னணி தொழிலதிபராக உயர்ந்துள்ளார். ஆம், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் பிரபுல் பிளோரே. இவருக்கு ஐஐஎம் அகமதாபத்தில் எம்பிஏ பட்டம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

இருப்பினும் 2017இல் தனது பட்டப்படிப்பை பாதிலேயே விட்டு விட்டு தொழில் செய்யத் தொடங்கினார். 'எம்பிஏ சாய்வாலா'(MBA Chai Wala) என்ற பெயரில் டீக்கடை தொழிலை தொடங்கி தற்போது நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட கடைகளை திறந்து ஒரு சாம்ராஜியத்தையே உருவாக்கியுள்ளார்.

இவரின் நெட் வொர்த் 24 கோடி ரூபாய்க்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் தற்போது ரூ.90 லட்சம் மதிப்பிலான Mercedes GLE 300D சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது குடும்பத்தினருடன் சேர்ந்த புதிய காரில் பிரபுல் போஸ் கொடுக்கும் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு வேகமாக வைரலாகியுள்ளது. இந்த பதிவை 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
news18



 


Post a Comment

0 Comments