Ticker

6/recent/ticker-posts

கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பங்கு


பொதுவாக, கல்வியில் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்துவத்தை அனைவரும் அறிவர்.

ஆனால், தகவல் தொடர்பு நுட்பத்தின் குறிப்பிட்ட பங்கு மற்றும் அதன் முழுமையான பலனை பெருதல் குறித்தே விவாதங்கள் நடந்து வருகின்றன. இப்பகுதி, கல்வித்துறையில் தகவல் தொடர்பு நுட்பத்தின் தாக்கம் பற்றிய கட்டுரைகள், வலைதளங்கள், கருத்தாய்வுகள் போன்றவைகளை கொண்டுள்ளது. அத்துடன், பள்ளிகளில் எந்த நோக்கில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்தும் இப்பிரிவில் காணலாம்.

தகவல் தொடர்பு பயன்பாடு, அதன் மூலம் ஏற்படும் நன்மைகள், தகவல் தொடர்பு நுட்பங்களை கல்வித் திட்டங்களுடன் ஒருங்கிணைக்க வழிமுறைகள் பற்றிய அனுபவங்களும், இப்பிரிவில் வழங்கப்படுகின்றன.

பயன்படும் தொழில்நுட்பங்கள்
உலகளவில் தொழில் நுட்ப பயன்பாட்டின் அனுபவங்களைப் பார்க்கும் போது, பெரும்பாலும் அவை கீழ்கண்ட தலைப்புகளுள் அடங்கும்
* பல்வேறு ஊடகங்கள் மூலம் கற்றல்
* கல்வித்தொலைக்காட்சி
* கல்வி வானொலி
* இணையதளம் மூலம் ஆலோசனை வழங்குதல்
* நூலகங்கள் மூலம் ஆராய்தல்
* அறிவியல் தொழில்நுட்பத்தில் செயல்முறைகள்
* ஊடகங்களின் பயன்பாடு
* இளம் குழந்தை வளர்ச்சி, குறைந்தளவு மக்கள்தொகை உள்ள இடங்களில் கல்வி, முதியோர் கல்வி, பெண்கல்வி, வேலைத்திறனை அதிகரித்தல் ஆகிய பகுதிகளில் தகவல் தொடர்பு நுட்பங்கள் குறிப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
* ஆசிரியர்களை தயார் செய்யவும், அவர்களது பணிக் காலத்தில் பயிற்சி அளிப்பதற்கான நுட்பங்கள்.
* கொள்கைளைத் திட்டமிடல், உருவாக்குதல், புள்ளி விவரங்கள் பராமரித்தலுக்கான நுட்பங்கள்.
* பள்ளிகள் பராமரிக்கத் தேவையான நுட்பங்கள்.

இன்றைய நுட்பங்கள்
கல்வி கற்றலுக்கு பயன்படும் நுட்பங்கள் குறித்த ஆய்வில், கீழ்கண்ட நுட்பங்கள் அடங்கும்

* கற்பிக்கும் உபகரணங்கள்
* ஆடியோ, வீடியோ மற்றும் இணைய வடிவிளான கருவிகள்
* மென்பொருள், பொருளடக்கம்
* இணைக்கும் முறைகள்
* ஊடகம்
* கல்வி சம்பந்தப்பட்ட இணையதளங்கள்.

கற்பித்தல் பணியை கற்பவர்கள் மையமாக மாற்றுவதில் தகவல் தொடர்பு நுட்பத்தின் பங்கு என்ன?

21ம் நூற்றாண்டில் கல்வித்துறை மாற்றத்தில், தகவல் தொடர்பு திட்டம் பேருதவி புரிந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இத்திட்டம் முறையாக செயல்படுத்தபடுமேயானால், வாழ்நாள் முழுக்க பயன்படும் கல்வி அறிவு மற்றும் திறமையை மாணவர்கள் எளிதாக பெற இயலும்.

தகவல் தொடர்பு நுட்பம், குறிப்பாக, கணிணி மற்றும் இணையதளம் முறையாகப் பயன்படுத்தப்பட்டால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் பயன்பெரும் வாய்ப்பு உள்ளது.

இந்தப் புதிய முறை பாடம் கற்பித்தலில், ஆசிரியர்கள் மாணவர்களை மையப்படுத்தி கற்பிக்க வழிவகுக்கிறது.

ஆர்வத்துடன் பயிலுதல்: 
தகவல் தொடர்பு தொழில் நுட்ப பயன்பாட்டின் மூலம், பல புதிய முறைகளில் தகவலை பயன்படுத்த மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. மணப்பாடம் செய்து படிப்பதைக் காட்டிலும், வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல், கற்றலை எளிமையாக்குதல், கற்போரின் வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி அமைதல் ஆகியவை சாத்தியமாகும்.

கூட்டாக பயிலுதல் : 
தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பயிலுதல் முறையானது, மாணவர்கள், ஆசிரியர்கள், வல்லுநர்களிடையே அவர்களுடைய இடம், தகுதியை கணிக்காமல் கலந்துரையாட ஊக்குவிக்கின்றது. பலவிதமான கலாச்சார பிரிவினரிடையே பழகுவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. இதன் மூலம் கற்போருடையே ஒருமித்த கருத்தும், தகவல் பரிமாரிக் கொள்ளும் திறனும் அதிகமாக உதவி செய்கிறோம். மேலும் கல்வி பயிலுதல் ஒரு காலகட்டத்திற்கு மட்டும் என்றில்லாமல், வாழும் காலம் முழுக்க தொடர்பணியாக மேற்கொள்ளப்படுகிறது.

தகவல் தொடர்பு தொழில் நுட்பம் பயிலுதலை உண்மையிலேயே அதிகப்படுத்தி உள்ளதா?

தகவல் தொடர்பு நுட்பத்தினால் கல்வியில் தாக்கம் ஏற்படுவது, அது எப்படி பயன்படுத்தப்படுகிறது, எதற்காக பயன்படுத்தப்படுகிறது, என்பதைப் பொறுத்து அமையும். மற்ற கல்வி கற்கும் சாதனங்கள், கருவிகள், மாதிரிகளைப் போல, தகவல் தொடர்பு நுட்பம் எல்லாருக்கும், எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி செயல்படுவதில்லை.

கல்வி பயிலுதலை சாத்தியமாக்குதல்:
தகவல் தொடர்பு நுட்பம், அடிப்படை கல்வி பயிலுதலை எவ்வளவு அதிகப்படுத்தியுள்ளது என்பதை கணித்தல் கடினமாகும். ஏனென்றால் இதற்காக நடத்தப்பட்ட ஆய்வுப்பணி சிறிய அளவிலானது. முழுமையாகவும் அது பற்றி கருத்து தெரிவிக்கப்படவில்லை. தொடக்கப் பள்ளி அளவில் தகவல் தொடர்பு நுட்பம் கடைபிடிக்கப்பட்ட மாதிரிகளும் இல்லை. உயர் கல்வி மற்றும் பெரியோர் கல்வியில்,
பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கு தகவல் தொடர்பு நுட்பங்கள் மூலம் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பதிவு செய்வதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது விளங்கும்.

தரம் உயர்த்துதல்:
வானொலி, தொலைக்காட்சி மூலம் கல்வி ஒளிபரப்பின் தாக்கம் குறித்த முழுமையான ஆய்வு நடத்தப்படவில்லை என்றாலும், சிறிதளவு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, சாதாரண பள்ளிக்கூடகல்வி முறையோடு இம்முறை ஒத்திருப்பதாக தெரிய வருகிறது. இம்முறையால் மாணாக்கர்களின் மதிப்பெண்களும், அவர்கள் பள்ளிக்கு வருகின்ற நாட்களும் உயர்ந்திருப்பதாக தெரிகிறது.

மாறாக, கணிணிப் பயன்பாடு, இணையதள மற்றும் அது தொடர்பான நுட்பங்களின் பயன்பாட்டால், பயிலுதலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது. ஆனால், இது பற்றி கருத்து பேதங்களும் நிலவுகிறது.

கணிணியின் பயன்பாட்டால், இருக்கக்கூடிய பாடத்திட்டத்தின் பயன்பாட்டளவு உயர்ந்துள்ளதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, கணிணி, ஒரு ஆசிரியராக இருந்து, எப்போதும் பயன்படுவதால், பாடங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற உதவி புரிந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மாணவர்களும் விரைவாக கல்வி பயிலுகின்றனர். கற்கும் திறன் அதிகமாகின்றது. மாணவர்கள் கணிணியை பயன்படுத்தும்போது, அதிகமாக படிக்கத் தூாண்டுதல் ஏற்படுகின்றது. இவ்வளவு முடிவுகள் தெரிவிக்கப்பட்டாலும் இதிலும் சில குறைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கணிணி பயன்பாடு, இணையதளம், அது சார்ந்த நுட்பங்கள், ஆசிரியர் பயிற்சியும், படிப்பதற்கு உகந்த சூழலை உருவாக்கவும், உதவி செய்கிறதாம். இந்த ஆய்வுகள் அனைத்தும், விமர்சனத்திற்கு உட்பட்டவை. இதில் குறைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சரியான புள்ளி விபரங்கள் இல்லாததே குறையாகும். மாணவர்கள் ஆசிரியர்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றம், கல்வி கற்றலில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வரும் என கூறுப்படுகிறது.

கணிணி மற்றும் இணைய தளங்களின் பயன்பாட்டை கணிப்பதில் உள்ள ஒரு பிரச்சனை, கற்போரை மையமாக வைக்கும் கல்வி சூழலை பரிசோதிக்க, தற்போது நடைமுறையில் இருக்கும் அளவீடுகளால் முடியாது. அத்துடன் கற்கும் முறையோடு, தொழில்நுட்ப பயன்பாடும், ஒருங்கிணைந்து வருவதால், எந்த நுட்பம் சரியானது என்பதை கண்டுபிடிப்பதும் கடினம். கற்றலில் ஏற்படும் மாற்றத்திற்கு, நுட்பங்கள்தான் காரணம் என்பதையும் முடிவு செய்ய இயலாது.

SOURCE:mytharavaitec



 



Post a Comment

0 Comments