
ஒவ்வொரு தொடரிலும் நாம் புதிய புதிய விஷயங்களை நாம் பார்த்து வருகின்றோம். அதில் உணவை எவ்வாறு நாம் தேர்ந்தெடுப்பதுஎன்பது குறித்து சென்ற வார தொடரில்ஒரு முன்னோட்டம் பார்த்தோம்.
"அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துயிக்கத் துவர பசித்து ".
இதன் பொருள் என்னவென்றால் ஒருவன் தான் முன்பு உண்ட உணவு செரித்ததை அறிந்து கொண்டு, உடம்புக்கு மாறுபாடு இல்லாத உணவுகளை கடைப்பிடித்து அவற்றையும் மிக நன்றாக பசித்த பிறகு உண்ண வேண்டும் என்பதுதான் இதன் பொருள் .
இன்று நாம் உண்ணும் உணவை எப்படி தேர்ந்தெடுக்கின்றோம் என்றால் நாவிற்கும் கண்களுக்கும் கவர்ச்சியானதை மட்டும்தான் தேர்ந்தெடுத்து உண்கிறோம்.
நம்மில் பலர் சாப்பிடுவதில் அளவுக்கோட்பாட்டையே (QVANTITATIVE THEORY) பின்பற்றுகின்றனர்.அதாவது வயிறு நிறைய சாப்பிடுவது நல்லது என்று கருதுகின்றனர். காலையில் இட்லி, தோசை வடை சாம்பார் சட்னி, மிளகாய் பொடி, இத்தவுடன் விருந்து என்றால் கேசரி போன்ற இனிப்பு வகைகளாக சாப்பிடுவதில் விருப்பம் மதியம் சாதத்தை மூன்று வகையாக பிரித்து சாம்பார் ரசம் மோர் என்றும் காய்கறிகள் ஊறுகாய், அப்பளம் என்றும் விருந்து என்றால் வடை பாயாசம் பழம் இவற்றோடு ஐஸ்கிரீம் போன்ற கூடுதல் வகைகள் இருக்கும் மாலையில் இனிப்பு காரம் காபியை தேநீர் இரவு உணவில் மறுபடியும் சாம்பார் ரசம் மோர் காய்கறிகள் சாப்பாடு இல்லையேல் இட்லி தோசை போன்ற சிற்றுண்டி என்ற என்ற பெயரில் பேருந்தி உண்பார்கள் இடையிடையே நொறுக்கு தீனி வேறு இவ்வளவு உண்டால்? வயிறு என்னவாகும் எண்ணி பார்ப்பதில்லையே?????
இவ்வாறு ருசிக்கு என்று உண்பதால் உண்ணும் அளவு கூடிக் கொண்டே போகும்
நமது நாட்டில் ஒரு பக்கம் ..வயிற்றுக்கு உணவின்றி வாடுபவர்கள் ,மறுபக்கம் உண்ணும் உணவு செரிக்காமல் துன்பப்படுபவர்கள்.
உண்ணாமல் பட்டினியாய் இறப்பவர்களை விட மிகுதியாக உண்டு நோய்க்கு ஆளானவர்களே தற்போதைய நிலையில் எண்ணிக்கையில் மிகுதி.உணவு கட்டுப்பாடு என்றும்,உடலைக் குறைக்க மருத்துவமனைகளிலும் கூடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஒவ்வொருவருக்கும் இப்பொழுது நாம் எவ்வாறு ஒவ்வொருவரின் உணவு தேவையை அறிந்து கொள்வது?
சரி, முதலில் தன்னை தனது உடல் நிலையை உடலின் தேவையை அறிந்து கொண்டால் தான் உண்ண வேண்டிய உணவின் அளவையும் தீர்மானிக்க முடியும்.ஒவ்வொருவருக்கும் தேவையான உணவின் அளவும் இயல்பும் வேறுபடும். ஆதலால் உணவின் அளவிற்கு பொதுவான விதியை கூற முடியாது.
"நா காக்க" என்பதற்கு பேச்சில் மட்டும் கட்டுப்பாடு வேண்டும் என்பது பொருள் அல்ல, நாக்கின் ருசியையும் கட்டுப்படுத்த வேண்டும். ருசியாக இருக்கிறது என்பதற்காக ஒரு பொருளை உண்டு கொண்டே இருக்கக் கூடாது, போதும் என்ற மனம் வேண்டும், சுய கட்டுப்பாடே சிறந்தது.
"வயிறு சுருங்க வாழ்வு பெருகும் ":
"வயிறு பெருக்க வாழ்வு சுருங்கும்" :
என்பது பட்டறிவில் கண்ட உண்மை ...
வயிற்றின் அரை பாகம் உணவாலும், கால் பாகம் நீராலும் நிரப்புவது நல்லது வயிற்றில் உணவு நிரம்பியது போக வெற்றிடமும் இருக்க வேண்டும் .
எனவே வள்ளுவப் பெருந்தகையின் வாக்கியர் கிணங்க "அற்றால் அளவரிந்து உண்போம்" ஆரோக்கியம் பெறுவோம்,அடுத்த வாரம் வேட்டை வாசகர்களுக்காக.....
மேலும் பல தகவல்களுடன் உங்களுக்காக உங்களுடன் அடுத்த வாரம் சந்திக்க உங்களுடன் உங்களுக்காக.

டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).


.gif)



0 Comments