Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தானுக்கு கிழே விழுந்த இந்திய அணி.. 93 வருட வரலாறு காணாத மோசமான சாதனை


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா தோற்றது. அத்தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் 15 வருடங்கள் கழித்து தென்னாபிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா தோற்றது. அடுத்ததாக கௌகாத்தியில் நடைபெற்ற 2வது போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.

அதன் காரணமாக 25 வருடங்கள் கழித்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா ரன்கள் அடிப்படையில் தங்களது மிகப்பெரிய தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்தது. இது மட்டுமின்றி ஏற்கனவே கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா ஒய்ட்வாஷ் தோல்வியை சந்தித்தது.

அந்த வேதனை தீர்வதற்குள் அடுத்த வருடமே தென் ஆப்பிரிக்காவிடம் மீண்டும் இந்தியா ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்தது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியா தங்களது சொந்த மண்ணில் அடுத்தடுத்த வருடங்களில் 2 ஒய்ட்வாஷ் தோல்விகளை சந்தித்து மற்றுமொரு வரலாறு காணாத மோசமான சாதனை படைத்துள்ளது.

கடந்த 1932 முதல் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றது. அந்த 93 வருட வரலாற்றில் 3 முறை மட்டுமே இந்தியா சொந்த மண்ணில் ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்துள்ளது. 

அந்த 3 ஒய்ட்வாஷ் தோல்விகள் பின்வருமாறு: 

1. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக: 2 – 0 (2), 2000 
2. நியூஸிலாந்துக்கு எதிராக: 3 – 0 (3), 2024 
3. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக: 2 – 0 (2), 2025*

இந்த படுதோல்வியால் 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளிப்பட்டியலில் இந்தியா 5வது இடத்திற்கு சரிந்துள்ளது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் 4 வெற்றிகள் பெற்றுள்ள ஆஸ்திரேலியா 100% புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. 4 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா 75% புள்ளிகளுடன் 2வது இடத்தில் தொடர்கிறது.

இதற்கு முன் 3வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 4 வெற்றி 4 தோல்வி 1 டிராவை சந்தித்து 48.15% புள்ளிகளுடன் பாகிஸ்தானுக்கு கீழே சென்று 5வது இடத்தில் விழுந்துள்ளது. தலா 1 வெற்றி 1 டிராவை சந்தித்துள்ள பாகிஸ்தான் 50% புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து, வங்கதேசம் 36.11%, 16.67% புள்ளிகளுடன் 6, 7வது இடங்களில் இருக்கின்றன. இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.

crictamil

 


Post a Comment

0 Comments