
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் வைத்து கொல்லப்பட்டதாக பரவி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த இம்ரான் கான், பின்னாளில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் என்ற கட்சியை 1996-ல் ஏற்படுத்தினார்.
அதன் பின்னர் பல்வேறு தேர்தலை சந்தித்த இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்தார்.
அதன் பின்னர் பிரதமராக இருந்தபோது வெளிநாடுகளில் தனக்கு கிடைத்த பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் ஆதாயம் பெற்றதாக இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதே போன்று இன்னும் சில வழக்குகள் அவர் மீது உள்ளன. இந்த நிலையில் ராவல்பிண்டி சிறையில் வைத்து இம்ரான் கான் கொலை செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளை இம்ரான் கானின் சகோதரிகள் நூறின் அலிமா மற்றும் உஸ்மா கான் ஆகியோர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments