
மொராகோவை சேர்ந்த 24 வயதான கால்பந்து வீரர் அச்ராஃப் ஹக்கிமி. இவர் தனது அசார்த்தியமான கால்பந்து திறமையால் உலக அளவில் புகழ் பெற்றார். மொராகோ போன்ற சிறிய நாட்டில் விளையாடிய ஹக்கிமியை, பாரீஸ் செயிண்ட் ஜெர்மாயின் எனப்படும் பிஎஸ்ஜி அணி அவரை விளையாட ஒப்பந்தம் செய்தது.
இந்த நிலையில் ஹக்கிமி கடந்த 2020ஆம் ஆண்டு ஹிபா என்ற பெண்ணை திருமணம் செய்தார். கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஜோடி வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், 3 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு, மனைவி ஹிபா, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார்.

மேலும், தமக்கு ஜீவனாம்சமாக கால்பந்து வீரர் ஹக்கிமியின் பாதி சொத்து, பணம் , நகை என வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். தமக்கு வெற்றி கிடைத்துவிடும் என்று மனைவி ஹிபா காத்திருந்த போது தான் அவருக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. கால்பந்து வீரர் ஹக்கிமி தாம் வாங்கிய சொத்து, வீடு, பணம் , நகை, கார் என அனைத்தும், தமது பெயரில் இல்லாமல் தனது தாயின் பெயரில் பதிய வைத்து இருக்கிறார்.
தன் தாய் மீதான பாசத்தில், ஒவ்வொரு சொத்தும் ஹக்கிமி தாய் பெயரில் தான் தொடக்கத்தில் இருந்தே எழுதி வைத்திருக்கிறார். மேலும், கால்பந்து விளையாடி, அதிலிருந்து வரும் பணமும் தாயின் வங்கி கணக்கில் தான் வைத்து இருக்கிறார். இதனால் ஹக்கிமியிடம் ஒரு சொத்து, கையிருப்பு பணம் கூட இல்லை.
இந்த தகவலை நீதிமன்றம் மூலம் மனைவி ஹிபா பெற்று அதிர்ச்சி அடைந்தார். தன் தாய் மீதான பாசத்தால் ஹக்கிமி செய்த காரியம், தற்போது அவரை காப்பாற்றி இருக்கிறது. இது குறித்து ஹக்கிமியிடம் பத்திரிகையாளர் கேட்டதற்கு, எனக்கு எல்லாமே எங்க அம்மா தான். இதனால் என் அம்மாவிடம் நான் சம்பாரிக்கும் பணத்தை கொடுத்துவிடுவேன். எனக்கு தேவைப்படும் போது பணத்தை அவரிடம் இருந்து கேட்டு வாங்கி கொள்வேன் என்று ஹக்கிமி கூறியுள்ளார். ஹக்கிமியின் இந்த செயலை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர். வெளிநாட்டில் சிலர் பணக்காரரை திருமணம் செய்து, அவரை விவாகரத்து பெறும் போது, ஜீவனாம்சமாக பாதி சொத்தை வாங்கி விடுகிறார்கள். இதற்கு பயந்து தான் பலரும் திருமணமே செய்யாமல் ஜோடியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில், ஹக்கமி செய்த செயல், தற்போது அவர்களுக்கு எல்லாம் ஒரு பாடமாக அமைந்தள்ளது.
mykhel
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments