Ticker

6/recent/ticker-posts

Ad Code



ரூ. 1000 கோடியை தாண்டியது விராட் கோலியின் சொத்து மதிப்பு… வியக்கவைக்கும் புதிய தகவல்


ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கு ரூ. 7.50 கோடி முதல் ரூ. 10 கோடி வரை கோலி பெறுவதாக தகவல். இது முன்னணி பாலிவுட் நடிகர்களை விடவும் அதிகம்
 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலியின் சொத்து மதிப்பு குறித்து வியக்க வைக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி நீக்கப்பட்ட பின்னரும், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு குறையவில்லை.

இன்ஸ்டாகிராமில் மட்டும் விராட் கோலியை 253 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

இந்திய அணியில் ஏ+ பிரிவில் விராட் கோலி உள்ளார். இதன்படி ஆண்டுக்கு ரூ. 7 கோடியை பெறுகிறார் கோலி.

ஒரு டெஸ்டில் விளையாட ரூ. 15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ. 6 லட்சம், டி 20 போட்டிக்கு 3 லட்சமும் கோலிக்கு வழங்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ள கோலிக்கு ஆண்டுக்கு ரூ. 15 கோடி அளிக்கப்படுகிறது.

கிரிக்கெட்டை தவிர்த்து சில ரெஸ்டாரண்டுகளை கோலி நடத்தி வருகிறார். ப்ளூ ட்ரைப், எம்.பி.எல், ஸ்போர்ட்ஸ் கான்வோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் விராட் கோலி

ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கு ரூ. 7.50 கோடி முதல் ரூ. 10 கோடி வரை கோலி பெறுவதாக தகவல். இது முன்னணி பாலிவுட் நடிகர்களை விடவும் அதிகம்

இன்ஸ்டாகிராமில் ஒவ்வொரு பெய்டு போஸ்டிற்கும் ரூ. 8.9 கோடி கோலிக்கு அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ட்விட்டரில் ஒரு போஸ்டிற்கு ரூ. 2.5 கோடியை கோலி பெறுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

மும்பையில் உள்ள கோலியின் வீடு ரூ. 34 கோடி என்றும், குர்கான் வீடு ரூ. 80 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்த அளவில் விராட் கோலியின் சொத்து மதிப்பு ரூ. 1,000 கோடியை தாண்டியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

news18


 



Post a Comment

0 Comments