Ticker

6/recent/ticker-posts

நலம் வாழ -மருத்துவப் பகுதி -26

ஒவ்வொரு வாரமும் நாம் தொடர்ச்சியாக உடல் நலம் குறித்த கருத்துக்களை கட்டுரை மூலமாக பார்த்து வருகின்றோம் .அதன்படி ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மூல காரணம் உண்டு.
அதில் முதல் காரணம் மலச்சிக்கல். நமது உடலில் நோய்  ஏற்படுவதற்கு முதல் அடிப்படை காரணம்  மலச்சிக்கல் தான்.

 

நாம் சாப்பிடும் உணவு சரியாக ஜீரணமாகாமல் காலையில் மலம் கழிக்கும்போது மிக சிரமமாகவும், கடினமாகவும் ,மலம் முழுவதுமாக வெளியே வராத நிலையிலும், தினமும் மலம் கழிக்க இயலாமை அல்லது வாரத்திற்கு சில நாட்கள் மட்டும் மலம் வெளியாவது, சிலருக்கு சூடான பானங்கள் பருகினால் மட்டுமே மலம் வெளியாக கூடிய நிலை,  போன்றவை மலச்சிக்கல் என்று கூறலாம்.

சரி இவை வருவதற்கு காரணம் என்ன? 

இன்றைய வாழ்க்கையில் தவறான உணவு முறை.முறையற்ற வாழ்க்கை, முறையற்ற உணவு முறை, பசித்துப் புசிக்காமல் இருப்பது, அல்லது அதிகமாக உண்பது. உணவுகளில் நார்ச்சத்துக்களை சேர்த்துக் கொள்ளாமை போன்றவை மலச்சிக்கலுக்கு காரணமாக அமைகின்றது.

நாம் சாப்பிடும் உணவு சாப்பிடும் நேரத்தில் இருந்து ஜீரணமாகி மலம் வெளியேறும் நிலை வரை ஆகும் நேரம் 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை ஆகும். இது சாப்பிடும் உணவுகளை பொறுத்து (திரவ உணவு/ சைவ உணவு/ மாமிச உணவு)  மாறுபடுகிறது.

சரி மலச்சிக்கலை தவிர்க்க நாம் என்னவெல்லாம் செய்யலாம். 
  • தினமும் நாம் நல்ல நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
  • நாம் குறைந்த பட்சம் தினமும் இரண்டு வகையான பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
  • தினமும் போதுமான அளவு தண்ணீரை குடிப்பது அதிகமான டீ காபி குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • புகை பிடிப்பது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.அதிக கவலை மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது,காலையில் தினமும் மலம் கழிக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். 
  • மேலும் மலம் வரும் உணர்வு ஏற்படும் பொழுது அந்த சமயத்தில் அதை கட்டுப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறான சில முறைகளை நாம் கடைப்பிடிக்கும் பொழுது மலச்சிக்கலை தவிர்க்கலாம்.

ஆனாலும் சில பொழுதுகளில் நோய் காரணமாகவும் அதிகமான மருந்துகள் உட்கொள்வதினாலும் ஏற்படக்கூடிய மலச்சிக்கலை சரியான தீர்வாக மருத்துவரை அணுகுவது நல்லது.

சரி மலச்சிக்கலுக்கு தீர்வுகளை காணலாம்
  • தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் தேன் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் எடுத்துக் கொள்வது நல்லது.
  • அதிகமான சூட்டின் காரணமாக ஏற்படக்கூடிய மலச்சிக்கலுக்கு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயம் பொடி செய்ததை கலந்து இரவு உறங்குவதற்கு முன்பு எடுத்துக் கொள்ளலாம்.
  • குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடிய மலச்சிக்கலுக்கு ஒரு டம்ளர் சூடான  பாலில் அல்லது ஏதாவது ஒரு பழச்சாறில் ஐந்து சொட்டுகள் வீதம்  விளக்கெண்ணெய அதாவது ஆமணக்கு எண்ணெய்.  கலந்து இரவு உறங்குவதற்கு முன்பு சாப்பிடலாம். விளக்கெண்ணெய் மருத்துவம் மட்டும் தினமும் பயன்படுத்தக் கூடாது. மலச்சிக்கல் இருக்கும் பொழுது மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது .
எனவே மலச்சிக்கலை தவிர்த்து உடல் நலம் காப்போம்.நலம் வாழ என்றும் 
மருத்துவ தகவல்களுடன்

மேலும் பல தகவல்களுடன் உங்களுக்காக உங்களுடன் அடுத்த வாரம்  சந்திக்க உங்களுடன் உங்களுக்காக. .
டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).  


 



Post a Comment

0 Comments