
நபி (ஸல்) அவர்களின் தாவாவில் காணப்பட்ட சிறப்பம்சங்களின் ஆலத்தை உணராமல், நாம் கற்றதை அல்லது தெரிந்ததை அடுத்தவர்களுக்கு எத்திவைக்கும் முறையில் ஏற்படும் முரண்பாடுகளே பல சமூப் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைவதை அவதாணிக்கலாம்.
ஒரு தாயிடம் மார்க்கப் பிரச்சாரம் செய்பவரிடம் கர்வம், தற்பெருமை, தானே பெரிய அறிவாளி என்ற நினைப்பு,நிதானம் தவரும் கடும் தொனி, அடுத்தவர்களை மதியாமை, நக்கல் நையாண்டி பண்ணல், அடுத்தவர்கள் கருத்தை மதியாமை, பக்கசார்புகள், சொல்லப்படுபவர்,சொல்லப்படும் மக்கள் தராதரம் பற்றி புரிந்து பேசும் தன்மை போன்றன இல்லாமை , தான் சொல்வதன் எதிர்வினை பற்றிய ஊகிப்பு இல்லாமை போன்றவைதான் அநேக பிரச்சிகளுக்குக் காரணம் என நினைக்கிறேன் .
உலமாக்களுக்கும், தாவா செய்யும் எவருக்கும் , எதை எங்கு எப்போது எவ்வாறு எப்படி சொல்வது என்ற தெளிவு இருக்க வேண்டும்.
சொல்லும் விடயம் சரியானது சஹீஹானது என்பதற்காகவோ, வெறும் மொழிபெயர்ப்புகளை பார்த்த மாத்திரத்தில் சத்தம் போடுவதோ, அல்லது ஒருவரின் உளவியல் அவர் சார்ந்த சமூக நிலைமை போன்றன கருத்தில் கொள்ளப் படாமலோ தாவா அமையக் கூடாது.
ஏனென்றால் பக்குவப்படாத ஒருவரின் உள்ளம், சைத்தானின் விளையாட்டுக்கு இலகுவானது. சிறிய விடயங்களை வைத்தேனும் சைத்தான் ஒற்றுமையை சீர்க்குழைப்பான். நல்லவரோ கெட்டவரோ ஒருவரின் தவறை திருத்த முனையும் போது, மனிதன் என்ற வகையில் அவருக்குரிய மரியாதையை கொடுத்து, அழகிய வார்த்தைகளில் பேசவேண்டும். குர்ஆன் ஹதீஸ் தான் என்றாலும், ஏதோ இராணுவத் தளபதி உத்தரவிடுவது போல எடுத்துக் கூறும் போது, சொல்லப்பட்ட விடயத்தை விட, சொல்பவர் மீதே வெறுப்பு வரும்.
நபி (ஸல்) புனித காபாவை அதன் அசல் அஸ்திவாராத்தில் கட்ட விரும்பினாலும், பிரிவினைக்குப் பயந்து அதை செய்யவில்லை.நபி ஸல் அவர்களுடனே இருந்த முனாபிக்குகளை தெரிந்தும் விட்டுவைத்தார்கள். அன்று அவர்களை கொலை செய்து இருந்தால், அதை மேற்கத்தியர் என்னவெல்லாம் இட்டுக்கட்டி இருப்பார்கள்.!
பள்ளிவாயல் உள்ளே சிறுநீர் கழித்ததவறுக்கு எவ்வாறு அது பிழை என்பதை நபி (ஸல்) கூறினார்கள்.!
ஸினா செய்ய அனுமதி கேட்டவருக்கு எவ்வளவு அழகாக அது பிழை என்பதை உணர்த்தினார்கள்.!
இப்ராஹீம் (அலை ) சிலைகளை தகர்த்தார்கள். அல்லாஹ் கைவிட வில்லை.அதை ஆதாரமாக வைத்து நபி (ஸல் )காபாவின் சிலைகளை அவராகப் போய் தகர்க்கவில்லை.மேற்கூறிய விடயங்கள் மிகப் பெரிய கருத்துக்களை எமக்குச் சொல்வதாக உள்ளது.
தாவாவில் எது மிகவும்முக்கியம் - அதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். சிறிய விடயங்களை எல்லாம் தூக்கிப் பிடித்து வாதப் பிராதிவாதங்கள் செய்வது பொருத்தம் அல்ல.
சமூக ஒற்றுமை கெடாதவாறு தாவா பணி அமைய வேண்டும். அறிவு வேண்டும். அதில் தெளிவு கட்டாயம் வேண்டும். இல்லையேல் குரங்கு வாளால் ஈ விரட்டிய கதை போலவே நல்லெண்ணம் இருக்கும். ஆபத்தும் மறைந்து இருக்கும்.
தாவா செய்பவர்களும் மார்க்க உபதேசம் செய்பவர்களுக்கு, அரங்கமும், ஊரும் அதிரக் கத்தி ஹக்கை மட்டும் சொல்வது தாவா ஆகாது. அங்கு அழகான அணுகுமுறை இருக்க வேண்டும். என்னதான் எப்படித்தான் சொன்னாலும் திருந்தாத எதையும் ஏற்காத ஜென்மங்களும் இருக்கவே செய்வார்கள் . அது அவர்கள் தலையெழுத்து.
எந்த இயக்கமும் 100% சரியான, பிழைகளே அற்றதாக இல்லை. அப்படி இருக்கவும் முடியாது. இருந்தால் மனிதன் பவீணமானவன் என்று இருப்பது பிழைத்துவிடும். குர்ஆன் ஹதீசுக்கு மாறுபடாத நம்பிக்கை உள்ளவர்கள், சிட்சிறு விடயங்களில் ஒருவருக்கொருவர் சுண்ணத்து செய்யப் போய் முட்டி மோதுவது காத்திரமானது அல்ல. எல்லோரும் சமூகத்தின் முக்கியமான சவால்கள் பிரச்சினைகள் பற்றி நோக்கவேண்டும். அந்தப் பொறுப்பை உணர வேண்டும். கருத்து மோதல்களை நேரடியாக அழகாக பேசி தெளிவுகளை பெற்றுக்கொள்ளவோ,அல்லது வளங்கவோ வேண்டும். சமூக வலையத்தலங்களில் அவை நாரக் கூடாது. இவை எனது சாதாரண அறிவுக்கு உற்பட்ட கருத்துகள் ஆகும். இதை எற்றோ மருத்தோ உங்கள் மேலான கருத்துக்களையும் பதியாலாம்.
பால் ஆரோக்கியமான பாணமாக இருக்கலாம். ஆனால் அதை மட்டுமே குடித்து உயிர் வாழ்வது ஆரோக்கியம் அல்ல.பிரியாணி சுவையான உணவு என்றாலும் குழந்தைக்கு அது ஜெமிக்காது.
தப்லீக், தௌஹீத், தரீக்கத், ஜமாத் எ இஸ்லாமிய, எதுவாக ஒருவர் இருந்தாலும், தான் சார்ந்த ஒருவரில் நம்பிக்கை வைத்து, கட்டுப்பட்டு, எல்லாம் அவர்தான் என்று இருப்பது பிழையும் மடமையும் ஆகும். ஏனெனில், ஒருவரிடம் எல்லாத் துறை சார் அறிவுகளும் இல்லை. மார்க்கத்தை தேடித் தேடி கற்பது கடமை. எனவே, பல்வேறு துறைகளில் உள்ள புத்திஜீவிகள், உலமாக்கள் என்போரின் அறிவை ஒவ்வொருவரும் தேடிப் பெறவேண்டும். அப்போதுதான் எமது குறுகியவட்ட சிந்தனைப் போக்கில் இருந்து விடுபடலாம். இல்லாது போனால் இஸ்லாத்தை அழிக்கத் திட்டம் போடும் அறிவு மேதைகளுக்கு இறையாகி தன்னை அறியாமலேயே கோடாரிக் காம்புகலாக எமது உலமாக்கலே மாறிவிடுவார்கள். எதிரிகளின் திட்டங்கள் அதிலும் யூதர்களின் திட்டங்கள் பலநூறு வருட அறுவடைகளாக கூட அமையும்.
ஈராணை முஸ்லீம்கள் கைப்பற்றினாலும்,அல்சபா என்ற யூதன் சீயா கொள்கையை உருவாக்கி முஸ்லீம்களைப் பிரித்தான்.
ஒரிரைக் கொல்கையில் இருந்த கிருஸ்தவர்களை, போல் என்ற யூதன் கிருஸ்தவ வேடமிட்டு திருத்துவத்தை (Trinity) உருவாக்கி கிருஸ்தவர்கள் முஸ்லீம்களுடன் ஒற்றுமைப் படாத வண்ணம் ஆக்கிவிட்டான்.
உஸ்மானிய பேரரசை வீழ்த்தியதும் யூத சதிதான்.ஐரோப்பாவில் மன்னர் ஆட்சிக்கு எதிராக மக்களை புரட்சி செய்யத் தூண்டி, பின்னர் ஜனநாயகம் என தனது ஜந்துக்களை பதவியில் அமர்த்தியதும் யூதர்களே.
இலங்கையில் இன்றும் ஏனைய இனத்தோர் என்ற பகுதியில் யூதர்கள் வாழ்கிறார்கள். எங்களுடைய அனைத்து அசைவுகளும் அவர்களால் அவதாணிக்கப் படலாம். அந்தப் பலவீனங்கள், நாமே எமக்காகத் தோண்டும் குழியாக அமையலாம்.
Dr. Ajmal hassan
20/6/2023.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments