Ticker

6/recent/ticker-posts

என்னது... தக்காளி நம்ம ஊர் காய்கறி இல்லையா..? தக்காளியின் உண்மை சரித்திரம் தெரிந்துகொள்ளுங்கள்.

தலைப்பை படித்ததும் எல்லோரும் ஒரு வினாடி ஆச்சரியத்தில் உறைந்து இருப்பீர்கள். தக்காளி இந்திய காய்கறி - பழ வகை இல்லை என்பதை நம்புவது கொஞ்சம் சிரமம் தான். அந்த அளவிற்கு தக்காளி நம் சமையலறையோடு ஒட்டி உறவாடிக்கொண்டு இருக்கிறது. 

சாம்பாரில் தக்காளி, ரசத்தில் தக்காளி, குருமாவில் தக்காளி, அதை விட பலரின் பேவரேட் பன்னீர் பட்டர் மசாலாவை கூட தக்காளி இல்லாமல் நினைத்து பார்க்க முடியாது

நம் ஊர் காய்கறி இல்லாவிட்டால் எப்படிபா நம்ப முடியும்? தக்காளி இல்லாமல் இந்திய உணவுகளை எல்லாம் எப்படி சமைப்பது? என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. ஆனால் உண்மை மாறாது தானே. நானும் நீண்ட காலமாக தக்காளியை பற்றிய உங்களை போல தான் நினைத்திருந்தேன். சுதா மூர்த்தி என்ற எழுத்தாளரின் புத்தகத்தில் படித்தபோது எனக்கும் ஒரே ஷாக்.

அப்பறம் தேடி பார்க்கும் போது தான் புரிந்தது அது மத்திய அமெரிக்க பகுதியான மெக்ஸிகோ மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து உலகம் முழுவதும் பரவியது என்று. காட்டு செடியாக இருந்த தக்காளியை 'ஆஸ்டெக்' என்ற இன மக்கள் தான் சுவைத்து வீட்டில் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். அதை பற்றிய பலக்கதைகள் அங்கே இருக்கிறது.

15 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவைத் தேடிய கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த பின்னர் ஸ்பெயின், போர்சுகள், இங்கிலாந்து என்று ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க கண்டத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கினர். அப்போது மெக்ஸிகோ மற்றும் தெற்கு அமெரிக்க பகுதிகளை காலனிகளாக மாற்றிய  ஸ்பெயின் மற்றும்  போர்சுகள் மக்கள் தக்காளியை அவர்கள் நாட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர்.

பின்னர் அருகில் உள்ள இத்தாலியர்கள் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர், அவர்கள் அதை பொமோடோரோ என்று அழைக்கிறார்கள், அதாவது "கோல்டன் ஆப்பிள்". தக்காளியின் முந்தைய மாறுபாடு மஞ்சள் நிறத்தில் இருந்ததன் காரணமாக இருக்கலாம். பிரெஞ்சுக்காரர்கள் இதை pomme d'amour என்று அழைத்தனர், அதாவது "காதல் ஆப்பிள்".

அலங்கார செடியாக கூட பயன்பபடுத்தியுள்ளனர். பின்னர் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கு தக்காளி பரவ ஆரம்பித்தது. மீண்டும் இது அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே ஒருசில இடங்களில் தக்காளியை விஷப்பழம் என்ற நம்பிக்கை இருந்தது. அவை உடைக்கப்பட்டு உணவுகளில் சேர்க்கப்பட்டது.   ஸ்பெயின் காலனிகளான பிலிப்பைன்ஸ் , இந்தோனேசிய பகுதிகளுக்கு அவர்கள் எடுத்து செல்ல இந்தியாவிற்கு போர்ச்சுகல் வணிகர்களால் வந்து சேர்ந்தது.

தக்காளியின்  இந்திய பயணம்:

போர்த்துகீசிய வணிகர்களின் வருகையுடன், தக்காளி உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் போன்ற பொருட்கள் இந்தியாவிற்கு பயணித்தது. தக்காளி 16 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் கொண்டு வரப்பட்டது. முதலில் வங்காள பகுதிக்கு கொண்டுவரப்பட்ட தக்காளி 'பிலிட்டி பேகன்' என்று அழைக்கப்பட்டுள்ளது.

அங்கே சில பகுதிகளில் மட்டும் பயிரிடப்பட்டு உணவில் பயன்படுத்தப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்குப் பிறகுதான், பிரிட்டிஷ்காரர்கள் இந்தியர்களை பிரிட்டனுக்குக் கொண்டு செல்ல அதிக தக்காளிகளை வளர்க்கச் சொல்லி இருக்கிறார்கள். இந்தியாவின் தட்பவெப்பநிலை தக்காளி பயிரிடுவதற்கு மிகவும் ஏற்றதாக இருந்ததால், பயிர்கள் விரைவாக பரவியது. சிறிது காலத்திலேயே தக்காளி சாகுபடிக்கு உத்தரகாண்ட் மிகப்பெரிய மையமாக மாறியது.

இந்தியாவில் வளர்ந்த தக்காளி நிலத்திற்கு ஏற்ப சிறு சிறு மாறுபாடுகளை ஏற்படுத்தியது. அப்படி முன்னேற்றம் அடைந்து தற்போது இந்தியா 7500 வகையான தக்காளிகளை உற்பத்தி செய்கிறது. 

அவை அனைத்து தேவைகளுக்கும் பொருந்தும். நமக்கு தெரிந்தது என்னவோ நாடு தக்காளி பெங்களூரு தக்காளி தான் .. ஆனால் எவ்வளவு இருக்கு பாருங்க..

அன்றைய காலத்தில் சுவையை மேம்படுத்தும் பொருளாக மட்டுமே தக்காளி பயன்படுத்தப்பட்டது. 

காலப்போக்கில் இந்தியாவில் தக்காளி மசாலாப் பொருட்களுடன் உணவை சேர்க்க பயன்படுத்தப்படுத்தப்படும் பிரதான சமையல் பொருளாகவே மாறிவிட்டது. 16 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் பழைய உணவுகள் அனைத்திலும் தக்காளி சேர்க்கப்பட்டது.

மேலும் இனிப்புடன் புளிப்பு கலந்த இந்த சுவையை விரும்பிய மக்களை தக்காளியை அடிப்படையாக வைத்ததே புதிய உணவுகளை உருவாக்கத் தொடங்கினர். தென் இந்திய உணவுகளை விட வாடா இந்திய உணவுகள் பெரும்பாலும் தக்காளி -வெங்காயம் -உருளைக்கிழங்கை தான் அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும். இதில் தக்காளி இல்லாத சமையலை நினைத்து கூட பார்க்க முடியாது.

இன்னொரு கேள்வி எழலாம்... தக்காளி இல்லாமல் 16 ஆம் நூற்றாண்டு வரை எப்படி இந்தியர்கள் சமைத்தார்கள்? என்று. புளி, மாங்காய், புளிப்பு கீரை, எலுமிச்சை, நெல்லி தான் நம் இந்திய தேசத்தின் புளிப்பு ஆதாரங்கள். அவரை மாற்றி தான் தக்காளி வந்துள்ளது. ஆனால் இப்போது தக்காளி இல்லாமல் ஒரு வாரம் சமைத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங்களேன்...

news18


 



Post a Comment

0 Comments