Ticker

6/recent/ticker-posts

Ad Code



இஸ்ரேலியர்களை அலாஸ்கா, கிரீன்லாந்திற்கு அனுப்புவது மத்திய கிழக்கு ஸ்திரத்தன்மைக்கு தீர்வாகும்!

ஸவுதி ஷூரா கவுன்சில் உறுப்பினர்  காட்டம்!

டிரம்ப் பதவிக்கு வந்ததும், பல சந்தர்ப்பங்களில் பாலஸ்தீனியர்களை காஸாவிலிருந்து இடமாற்றம் செய்யப் பரிந்துரைத்து வருவதோடு,  ஓர் அசாதாரண மறுவடிவமைப்புத் திட்டத்தை மேற்கொள்வதற்கான எண்ணத்தில் நெதன்யாகுவுடன் சேர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

காஸாவிலிருந்து பாலஸ்தீனியர்களை நகர்த்துவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முன்மொழிவை ஸவுதி ஷூரா கவுன்சில் உறுப்பினர் விமர்சித்துள்ளார்,

இஸ்ரேலியர்களை அலாஸ்கா மற்றும் கிரீன்லாந்திற்கு மாற்றுவது மத்திய கிழக்கு ஸ்திரத்தன்மைக்கு சிறந்த தீர்வாக இருக்குமென்ற முன்மொழிவை ஸவுதி ஷூரா கவுன்சில் உறுப்பினர் யூஸுப் பின் த்ராத் அல்-சாதூன் பரிந்துரைத்துள்ளார்.
'டிரம்ப் தனது அன்புக்குரிய இஸ்ரேலியர்களை அலாஸ்கா மாநிலத்திற்கும், பின்னர் கிரீன்லாந்திற்கும்  இடமாற்றம் செய்ய வேண்டும்,' என்று குறிப்பிட்டுள்ளார் கலாநிதி யூஸுப் பின் த்ராத் அல்-சாதூன்.

பல முக்கிய அரபு, ஐரோப்பிய மற்றும் பிற நாடுகளால் பரவலாகக் கண்டனம் செய்யப்பட்ட டிரம்பின் கருத்துகளைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழனன்று கருத்து வெளியிடுவதில், 

 "பாலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த நாட்டில் அல்லாமல் ஸவூதி அரேபியாவில் தங்கள் அரசை நிறுவ வேண்டும், பாலஸ்தீனிய இறையாண்மை பற்றிய எந்தவொரு கருத்தையும் நிராகரிக்க வேண்டும்; ஸவூதி அரேபியாவில் பாலஸ்தீன அரசை உருவாக்க முடியும்;  அவர்களுக்கு அங்கு நிறைய நிலம் உள்ளது,'' என்றவாறாக முரண்பாடான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளமைக்குப் பதிலடியாகவே யூஸுப் பின் த்ராத் அல்-சாதூன்,  இஸ்ரேலியர்களை அலாஸ்கா மற்றும் கிரீன்லாந்திற்கு மாற்றுவது மத்திய கிழக்கு ஸ்திரத்தன்மைக்கு சிறந்த தீர்வாக இருக்குமென்று குறிப்பிட்டுள்ளார்.


செம்மைத்துளியான்

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments