கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் விபத்தில் தனது அனைத்து நினைவுகளையும் இழந்துள்ளார். அவரது காதலனையே டாக்ஸி டிரைவர் என அவர் அழைத்த சம்பவம் அவருக்கு நெருங்கியவர்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருநாள் நாம் தூங்கி எழுந்த பின்னர் நமக்கு அனைத்து நினைவுகளும் இல்லாமல் போனால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்! அத்தகைய சம்பவம் கனடாவை சேர்ந்த நாஷ் பிள்ளை என்பவருக்கு ஏற்பட்டுள்ளது.
இவர் தனது தென்னாப்பிரிக்காவில் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியபோது அவருக்கு காயம் ஏற்பட்டு உயிர் தப்பினார். அதன்பின்னர் 2022 இல் விபத்து ஏற்பட்டு மீண்டபோது அவரது காதலன் மற்றும் 6 வயது குழந்தையை அவருக்கு நியாபகம் இல்லை.
ஒருமுறை அவரது காதலன் ஜோகன்ஸ் நாஷ் பிள்ளையை சிகிச்சைக்காக காரில் அழைத்துச் சென்றபோது அது டாக்சி டிரைவர் என்றுதான் நாஷ் பிள்ளை நம்பிக்கொண்டிருந்தார். நரம்பியல் துறை நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். நாஷ் பிள்ளை மற்றும் ஜோகன்ஸ் இடையே கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது.
தற்போது நாஷ் பிள்ளை சிறிது சிறிதாக உடல் நலம் குணமடைந்து வருகிறார். தற்போது அவரது கணவரை நாஷ் பிள்ளைக்கு கொஞ்சம் அடையாளம் காண முடிகிறது.
அவரது ஒத்துழைப்பு இல்லாவிட்டால் தன்னால் குணம் அடைந்திருக்க முடியாது என்று கூறுகிறார் நாஷ் பிள்ளை. இருப்பினும் அவரது மகளை அடையாளம் காண்பதில் அவர் சிரமப்படுகிறார். இருப்பினும் தாய்மை உணர்வு தனக்கு ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது 2 ஆவது குழந்தைக்கு நாஷ் பிள்ளை தாயாகியுள்ளார். அவருக்கு நேர்ந்த சம்பவம் சினிமா கதையை போல பல இணைய தளங்களில் அதிகம் படிக்கப்பட்டுள்ளது. இதனை ஆவணமாக்க வேண்டும் என்று வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
news18
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments